கொவைட்-19 சமாளிக்க விரைவாக செயல்பட வேண்டுகின்றோம்

2020-03-29 14:59:01
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கொவைட்-19 தொற்று நோயைச் சமாளிப்பதற்காக ஜி-20 குழுவின் உறுப்பு நாடுகளின் தலைவர்களிடையே மார்ச் 26ஆம் நாளன்று சிறப்பு உச்சி மாநாடு நடைபெற்றது. அப்போது, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பேசுகையில், முக்கிய கட்டத்தில் அறைகூவலை எதிர்கொண்டு விரைவாக செயல்பட வேண்டுகின்றோம் என்று வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், சர்வதேச தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட 4 அம்ச ஆலோசனைகளையும் ஷிச்சின்பிங் வழங்கினார்.

அதேசமயத்தில், தேவை உள்ள நாடுகளுக்கு சீனா முனைப்புடன் இயன்ற அளவிலான உதவி அளித்து வருகிறது. தற்போது வரை, 89 நாடுகளுக்கும் சர்வதேச சுகாதார அமைப்பு, ஆப்பிரிக்க ஒன்றியம் உள்ளிட்ட 4 சர்வதேச அமைப்புகளுக்கும் சீன அரசு அவசர உதவி வழங்கியுள்ளது. இவற்றில், பரிசோதனை மருந்து, முக கவசம் போன்ற மருத்துவப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன. நோய் தடுப்புக்கான சர்வதேச ஒத்துழைப்பை ஆதரிக்கும் விதமாக, சீனா, சர்வதேச சுகாதார அமைப்புக்கு 2கோடி அமெரிக்க டாலர் நிதி நன்கொடையாக அளித்தது.

கூடுதலாக, சீனாவின் உள்ளாட்சி அரசுகள், தொழில் நிறுவனங்கள், அரசுசாரா நிறுவனங்கள், நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவி செய்து வருகின்றன.

அவசர நேரத்தில், ஜி-20 குழுவின் உறுப்பு நாடுகள் உடனடியாக செயல்பட வேண்டும். உலகில் வளர்ந்த பொருளாதாரச் சமூகம் மற்றும் புதிய சந்தை நாடுகளின் பிரதிநிதிகளாக, ஜி-20 குழுவின் நாடுகள் இப்போது, தலைமைத் திறனையும் தீர்மானம் அளிக்கும் திறனையும் வெளிக்காட்ட வேண்டியது அவசியமாகும். உச்சி மாநாட்டில் உருவான பல முக்கிய பொது கருத்துக்களை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். கூடிய விரைவில் கொவைட்-19 தொற்று நோயைத் தேற்கடிப்பதற்கு பங்காற்ற வேண்டும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்