பேரிடர் நிலையில் மைக் பாம்பியோ போன்ற அமெரிக்காவின் அரசியல்வாதிகள் என்ன செய்கின்றார்கள்?

2020-03-29 19:25:18
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கொவைட்-19 நோய் தொற்று ஏற்பட்ட பிறகு, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, அமெரிக்காவிலும் வெளிநாட்டிலும் உள்ள பல இடங்களில் சீனா மீது களங்கம் ஏற்படுத்தி, சதிக் கோட்பாடு என்ற கருத்தைப் பரப்பி வருகிறது. அவரது சொல்லும் கருத்தும், தற்போது கொவைட்-19 நோயை எதிர்த்து போராடும் சர்வதேச ஒத்துழைப்புக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தனது கருத்தைப் பரப்பிய வேளையில், அமெரிக்காவில் நோய் நிலை நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. அமெரிக்க அரசுத் தலைவர் சமீபத்தில் முனைப்புடன் நோய்க்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பில் பங்கேற்க தொடங்கியுள்ளார் என்பதைப் பார்க்கின்றோம். சீனத் தலைவருடன் தொலைப்பேசியில் உரையாடியபோது, நோய் எதிர்ப்பு ஒத்துழைப்பை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார். ஆனால், இந்த மாற்றத்துக்கு ஏற்ப, மைக் பாம்பியோ செயல்படவில்லை. மாறாக, அவர் தொடர்ந்து சிக்கலை உருவாக்கி, சீன-அமெரிக்க ஒத்துழைப்புக்கு தடை செய்து வருகிறார்.

இவ்வாறு செய்து வரும் அவர், அரசியல் மூலதனங்களைப் பெற்று, தனது அரசியல் நோக்கத்தை நனவாக்க முயல்கிறார்.

நோய் தொற்றை எதிர்கொள்ளும் போது, அமெரிக்காவின் மிக உயர்நிலை தூதாண்மை அதிகாரியாக மைக் பாம்பியோ, நாட்டு மக்களின் உயிர் பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல், தனது நலனுக்காக தவறாக செயல்பட்டு வருகின்றார்.

தற்போது, கொவைட்-19 உலகளவில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் வெளியான அறிக்கையில், நோய் தொற்றையும் அதனால் சுகாதாரம், சமூகம் மற்றும் பொருளாதாரத்திற்கு ஏற்படும் சிக்கலான பாதிப்புகளையும் சமாளிப்பது தற்போதுள்ள மிக அவசியமான கடமையாகும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

தற்போது முக்கிய கட்டத்தில், மைக் பாம்பியோ, அரசியல் பகைமையை உருவாக்குவதில் கவனம் செலுத்தினால், உலகளவில் அமெரிக்கா தனிமைப்படுத்தப்படும் நிலையைத் தீவிரமாக்கும். அமெரிக்காவின் பொது நலன்களைப் பொருட்படுத்தாமல், சுய அரசியல் நலனுக்காக மைக் பாம்பியோ செயல்பட்டால், அதற்கு அமெரிக்கா அதிக விலை கொடுக்க வேண்டி வரும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்