கொவைட்-19 நோயைச் சமாளிக்க ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பே 2ஆவது வாய்ப்பு!

மதியழகன் 2020-03-30 20:35:58
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கொவைட்-19 நோயின் தீவிர நிலையை எதிர்கொள்ளும் போது, எந்த நாடும் தனியாகவே அதைச் சமாளிக்க முடியாது. முன்பு இல்லாத அளவிற்கு பன்னாட்டுச் சமூகம் மேலும் பெரிய ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும்.

உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் தெட்ரோஸ் முன்பு வருத்தம் தெரிவித்து பேசுகையில், கடந்த இரண்டு திங்கள், பல நாடுகள் நோயைச் சமாளிப்பதற்கு தேவையான ஆயத்தம் செய்யவில்லை. தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இதனால், முதலாவது வாய்ப்பை இழந்து விட்டது என்று கூறினார்.

தற்போது, 2வது வாய்ப்பாக இருக்கும் ஒத்துழைப்பு மற்றும் ஆக்கப்பூர்வ நடவடிக்களை பல்வேறு நாடுகளும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று தெட்ரோஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொவைட்-19 நோயைச் சமாளிக்கும் விதம், ஜி-20 உச்சி மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட உடன்பாடுகள், 2ஆவது வாய்ப்பை கைப்பற்ற பன்னாட்டு சமூகத்திற்கு உதவும் என்று நம்புகின்றோம். தற்போது, உலக ஒத்துழைப்புடன் நோயை எதிர்த்து போராடும் திசை தெளிவாக வழிகாட்டப்பட்டுள்ளது. பல்வேறு தரப்புகள், உச்சி மாநாட்டின் சாதனைகளை நடைமுறைக்கு கொண்டு வருவது அவசியமானது. இதற்காக, சர்வதேச ஒத்துழைப்புக்கு தடை செய்யும் செயல்பாடுகளை முற்றிலும் நீக்க வேண்டுகின்றோம்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்