கொவைட் 19-ஐ கட்டுப்படுத்துவதே உயிரிழந்தோருக்குச் செலுத்தும் அஞ்சலி

பூங்கோதை 2020-04-04 20:38:29
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கடந்த 2 திங்களாக கரோனா வைரஸ் பரவலைச் சீனா முழு மூச்சுடன் எதிர்த்துப் போராடி வருகிறது. தற்போது, கரோனா வைரஸ் தடுப்புப்பணியில் சீனா முக்கிய சாதனைகளைப் பெற்று, உலக அளவில் முதலாவது பாதுகாப்புக் கோட்டையாக உருவெடுத்துள்ளது. இதற்காக, சீனா மாபெரும் நலனைத் தியாகம் செய்துள்ளது.

ச்சிங்மிங் தினமான 4ஆம் நாள் இந்த வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளுக்கும் சக நாட்டவர்களுக்கும் சீன மக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். மக்களே முதன்மை என்ற கருத்தையும், மக்களின் உயிர் மீது வைத்துள்ள மதிப்பையும் இது முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது.

ஆனால், மேலை நாடுகளைச் சேர்ந்த சில அரசியல்வாதிகளும், செய்தி ஊடகங்களும் சுயநலத்துடன் செயல்பட்டு வருகின்றனர். சீனா உடனுக்குடன் வெளியிட்ட அறிவிப்புகளை அந்நாடுகள் வேண்டுமென்றே அலட்சியம் செய்ததுடன் இவ்வைரஸ் பரவலைப் பயன்படுத்தி சீனாவின் மீது பழி தூற்றி வருகின்றன. சீனா சொந்த நலனைத் தியாகம் செய்து முழு முயற்சியுடன் போராடி வந்தபோது இருந்த கால அவகாசத்தை அவர்கள் வீணடித்து விட்டனர். ஐரோப்பிய நாடுகள் சீனாவைப் போல், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்ட போது நியூயார்க் டைம்ஸ் நாளேடு இரட்டை வரையறையை வெளிப்படையாக மேற்கொண்டது.

பொய்க்கூற்று அம்பலமாவது உறுதி. வாஷிங்டன் போஸ்ட் அண்மையில் வெளியிட்ட தலையங்கத்தில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான வெளியுறவு அமைச்சர். சீனாவின் மீதான பொருளற்ற தாக்குதலில் அவர் ஈடுபட்டு வருகிறார். இதன் மூலம், சாரம்சரீதியில் முன்னேற்றம் அடைய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 3ஆம் நாள், அமெரிக்காவின் புகழ்பெற்ற அறிஞர்கள் மற்றும் முந்தைய அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 93 பேர் கடிதம் ஒன்றைக் கூட்டாக வெளியிட்டனர். சீனாவும் அமெரிக்காவும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி கரோனா வைரஸைக் கூட்டாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்