​நோய் தடுப்புக்கான உதவியை வேண்டிய அதிகாரி பதவி நீக்கப்பட்டதில் என்ன இரகசியம்?

வான்மதி 2020-04-05 17:44:31
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn


கப்பலில் மாலுமிகளைக் காப்பாற்றும் விதம் தியோடர் ரூஸ்வெல்ட் விமானந்தாங்கி கப்பலின் கேப்டன் குரோசியர் கடிதம் ஒன்றை அனுப்பிய பிறகு, 3ஆம் நாள் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இணையத்தில் வெளியான ஒரு காணொலியில், குரோசியர் கப்பலிருந்து இறங்கிய போது, மாலுமிகள் அவரது பெயரை அழைத்து கைதட்டிய வண்ணம் அவரை வழியனுப்பினர். அமெரிக்காவின் விழுமியங்களின்படி, ஆயிரக்கணக்கானோரின் உயிரைக் காப்பாற்ற முயன்ற குரோசியர் வீரர் ஆவார். ஆனால் வீரரான அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் என்ன மறைக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுந்துள்ளது.

தியோடர் ரூஸ்வெல்ட் கப்பலில் 137 மாலுமிகளின் வைரஸ் சோதனை முடிவுகள் நேர்மறை ஆகும். அமெரிக்க இராணுவத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் இது 10 விழுக்காட்டுக்கு மேல் உள்ளது என்று சிஎன்என் நிறுவனம் அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரி ஒருவரின் கூற்றை மேற்கோள் காட்டி தகவல் வெளியிட்டது.

கேப்டன் குரோசியர் முன்னெச்சரிக்கையையும் ஆலோசனையையும் வழங்கிய போதிலும், அமெரிக்க கடற்படையின் உயர் நிலை அதிகாரிகள் தங்களது இயலாத்தன்மையை மறைத்து சொந்தப் பொறுப்புகளைத் தட்டிகழித்து, குற்றமில்லாதவருக்குத் தண்டனை விதித்துள்ளனர். மாலுமிகள் குரோசியரை ஏன் வீரராகக் கருதினர் என்பதையும் அமெரிக்க கடற்படையின் செயல் ஏன் சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

குரோசியருக்கு மீண்டும் பதவி அளிக்க வேண்டும் என்ற நடவடிக்கையில் தற்போது அமெரிக்க மக்கள் பலர் இணையவழியில் பங்கெடுத்துள்ளனர்.

இந்த பதவி நீக்க சம்பவத்தில், அமெரிக்க இராணுவத்துக்கு 3 நோக்கங்கள் உண்டு என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஒன்று, குரோசியர் இரகசியத்தை வெளிப்படுத்தியற்கான தண்டனை இதுவாகும். இரண்டு, விமானந்தாங்கி கப்பலில் ஏற்பட்ட பெருமளவு வைரஸ் பாதிப்புக்கு அமெரிக்க கடற்படை யாராவது ஒருவரை பலிகடா ஆக்க வேண்டும். மூன்று, இரகசிய கசிவு, நெடுநோக்கு அச்சுறுத்தல் ஆற்றலைப் பாதித்துள்ளது. இத்தகைய தவறு மீண்டும் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் கண்டிப்பான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அமெரிக்க இராணுவம் கருதுகிறது.

உயிருக்குப் பதிலாக சுயநலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அமெரிக்கா நோய் தொற்று தடுப்புக்கு வகுத்த கொள்கைகள் பயனளிக்கவில்லை. கால அவகாசத்தை வீணடித்த அந்நாட்டின் உயர்நிலை அதிகாரிகள் சிலரும் முக்கிய குற்றவாளிகள் ஆவர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்