உலகிற்கு நம்பிக்கை தருவது வூஹானில் இருந்த போக்குவரத்து தடை நீக்கம்

வான்மதி 2020-04-08 19:00:06
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வூஹானில் இருந்த போக்குவரத்துத் தடை ஏப்ரல் 8ஆம் நாள் நீக்கப்பட்டது. 76 நாட்களுக்குப் பின், புதிய ரக கரோனா வைரஸால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இந்நகரம் வசந்தகாலத்தில் தனது வசீகரத்தை மீண்டும் வெளிகொணரத் தொடங்கியுள்ளது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின்படி, புதிய ரக கரோனா வைரஸ் பரவிய தொடக்கத்தில் போக்குவரத்துத் தடை போன்ற அவசர நடவடிக்கைகளை சீனா மேற்கொள்ளாமல் இருந்திருந்தால், சீனாவில் வூஹான் நகரைத் தவிர மற்ற நகரங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை 7 லட்சத்தைத் தாண்டியிருக்க வாய்ப்புண்டு.


நோய் தொற்று பரவி வரும் இந்நிலையில், புதிய ரக கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் சீனாவின் மாபெரும் தியாகம் மற்றும் அனுபவங்களின் மதிப்பு எவ்வளவு அதிகம் என்பதை மேலதிக மக்கள் அறிந்து கொண்டு வருகின்றனர்.

வெளிநாடுகளில் வெளிவந்த பல செய்திகளைத் தொகுத்து ஆராய்ந்தால், புதிய ரக கரோனா வைரஸின் பரவலைச் சீனா பயனுள்ள முறையில் கட்டுப்படுத்தியதற்கு மூன்று காரணங்கள் உண்டு என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. ஒன்று, சீன அரசின் மிக வேகமான செயல்திறன். இரண்டு, சீன மக்களின் ஒருமித்த முயற்சி. மூன்று, நோய் தொற்று தடுப்பு கொள்கையின் கண்டிப்பான நடைமுறையாக்கம்.

உலகின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த பொது மக்கள் ஒன்றுபட்டு, அறிவியல் ரீதியில் நேர்மை மற்றும் ஒத்துழைப்பு மனப்பாங்குடன் செயல்பட்டால், இந்நோய் தொற்றை முழுமையாகத் தோற்கடிக்கும் தினத்தை விரைவில் வரவேற்கும் நிலை வரும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்