அமெரிக்காவின் சுயநலத்தை அப்பட்டமாக வெளிப்படுத்திய கொவைட்-19

பூங்கோதை 2020-04-08 20:31:52
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கரோனா வைரஸ் பரவி வருகின்ற தற்போதைய நிலைமையில் பல நாடுகளுக்கிடையில் “முக கவசத்துக்கான போர்” ஏற்பட்டுள்ளது என்று சி என் என் செய்தி நிறுவனம் அண்மையில் தெரிவித்துள்ளது. இவ்வைரஸ் பரவிய பிறகு, தனது கூட்டணி நாடுகள் உள்ளிட்ட பிற நாடுகளின் முகக் கவசம் உள்ளிட்ட மருத்துவப் பொருட்களை அமெரிக்கா வழிமறித்து எடுத்து சென்ற செய்திகள் அதிகம்.

சீனாவிலிருந்து ஜெர்மனி இறக்குமதி செய்த முகக் கவசங்கள் வழியில் மறிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டன என்று ஜெர்மனி செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், பிரான்ஸ் இறக்குமதி செய்த முகக் கவசங்களும் அமெரிக்காவால் வழிமறித்து அபகரிக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளைக்காரரைப் போன்ற அமெரிக்காவின் செயலைச் சமாளிக்கும் வகையில், பல்வேறு நாடுகள் சிறப்பு வழிமுறைகளின் மூலம் மருத்துவப் பொருட்களைப் பாதுகாக்க நேரிட்டுள்ளது.

உண்மையில், இச்செயலைத் தவிர, தற்காப்பு உற்பத்திச் சட்டத்தைப் பயன்படுத்தி, மருத்துவப் பொருட்களின் ஏற்றுமதியை அமெரிக்கா தடை செய்துள்ளது. “எங்களுக்கு முகக் கவசங்கள் தேவை. அதனால் பிற நாடுகள் இவற்றைப் பெறுவதை நாங்கள் விரும்பவில்லை” என்ற டிரம்பின் இக்கூற்று, அந்நாட்டின் சுயநலத்தை வெளிப்படுத்தியுள்ளது.

தேசிய சுயநலமுடைய அமெரிக்காவின் செயல்களின் காரணமாக, அமெரிக்கா-ஐரோப்பிய உறவு நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்