அமெரிக்காவின் அறநெறியை கெடுக்கும் பாம்பியோ

ஜெயா 2020-04-12 19:04:31
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கொவைட்-19 நோய் பரவி வரும் நிலையிலும், ஈரான் மீதான தடை நடவடிக்கையை நீக்க மாட்டோம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ பலமுறை கூறினார். இதனால் ஈரானில் நோய் பரவல் நிலை மேலும் மோசமானது.

உள்ளூர் நேரப்படி 11ஆம் நாள் நண்பகல் வரை, ஈரானில் கொவைட்-19 நோயால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 70029 ஆகும். இவர்களில் 4357 பேர் உயிரிழந்தனர். உயிரிழப்பு விகிதம் உலக சராசரி நிலையை விட அதிகம். இது குறித்து ஈரான் சுகாதார அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், உயிரிழப்பு விகிதம் அதிகரிப்புக்கான முக்கிய காரணம், அமெரிக்காவின் தடை நடவடிக்கையால் ஏற்பட்ட மருத்துவச் சிகிச்சைப் பொருட்களின் பற்றாக்குறைத் தான் என்று தெரிவித்தார்.

தற்போது, ஈரான் நோய் பரவலுடன் போராடும் முக்கிய காலத்தில் அமெரிக்கா ஒரு சார்பு தடை நடவடிக்கைகளைத் தொடர்ந்து நிர்ப்பந்தம் செய்வது, மனிதநேய எழுச்சியை மீறியது. நோயுடன் ஈரான் போராடுவதைத் தடுப்பதோடு, நோய் பரவலைத் தடுக்கும் உலக ஒத்துழைப்புக்கும் இது கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அமெரிக்கா உலக நோய் தடுப்புக்கு நிதி உதவி செய்யும் என்று பாம்பியோ பலமுறை அறிவித்துள்ளார். ஆனால், இதுவரை அமெரிக்கா எந்த செயலையும் நனவாக்காத நிலையில், தடை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் சில அரசியலாளர்கள் சர்வதேச நோய் தடுப்பு ஒத்துழைப்பை சீர்குலைத்தவராகவும், வல்லரசு அரசியல் ஆதிக்கக்காரராகவும் மாறிக் கொண்டிருக்கின்றனர் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்