கரோனா வைரஸ் பரவல் தடுப்பு——டிரம்ப் அரசின் தோல்விக்குக் காரணம்

பூங்கோதை 2020-04-14 15:03:59
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளேடு, அந்நாட்டின் முந்தைய மற்றும் தற்போதைய அதிகாரிகள் பேட்டிகளிலுள்ள கூற்றையும் பல நிபுணர்களின் மின்னஞ்சல்களையும் தொகுத்து கட்டுரையாக சமீபத்தில் வெளியிட்டது.

வைரஸ் பரவல் தீவிரமாகுவதற்கு முன்பு அமெரிக்க உளவுத் துறைகளும், தேசியப் பாதுகாப்புக் கமிட்டியும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பலமுறை எச்சரிக்கை செய்துள்ளனர். ஆனால், டிரம்ப் அரசு இதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை, தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்று இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் டைம்ஸ் நாளேடு வெளியிட்ட மற்றொரு கட்டுரையில் முக்கியக் காலவரிசை தொகுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி திங்களின் ஆரம்பக்காலத்தில், அமெரிக்க அரசவை முன்வைத்த உளவுத்தகவலில் கரோனா வைரஸ் பற்றிய தகவல் இடம்பெற்றிருந்தது. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், இத்தகவலைச் சுகாதார அமைச்சர் அலெக்ஸ் அசாருக்குத் தெரிவித்துள்ளது. ஆனால் அப்போது, ஈரான் படைத்தளபதி சுலைமணி மீதான தாக்குதல், சீன-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தை, தனது பதவி நீக்கம் பற்றிய கண்டன தீர்மானம் ஆகியவற்றிலேயே டிரம்ப் கவனம் செலுத்தி வந்துள்ளார்.

ஜனவரி 30ஆம் நாள், கரோனா வைரஸின் அபாயத் தன்மை பற்றி அலெக்ஸ் அசார் டிரம்புக்கு மீண்டும் நினைவூட்டியுள்ளார். அப்போதும், அதற்கு டிரம்ப் முக்கியத்துவம் அளிக்கவில்லை.

ஜனவரி 31ஆம் நாள், இவ்வைரஸ் பரவல் பற்றிய செய்தியாளர் கூட்டம் வெள்ளை மாளிகையில் நடத்தப்பட்டது. அப்போது, அமெரிக்காவில் பொது சுகாதாரத்துக்கான அவசர நிலை அறிவிக்கப்பட்டது.

பொருளாதார வளர்ச்சியின் சூழ்நிலை, அரசுத் தலைவர் தேர்தலில் டிரம்ப் பேரம் பேசுவதற்கான முக்கிய காரணமாகும். பிப்ரவரி திங்கள் முழுவதும் அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை, ஆனால் அதை மறைக்க சீனாவின் பெயரைக் கூறி டிரம்ப் அரசு சொந்த பொறுப்பைத் தட்டிக்கழித்து வருகிறது. அமெரிக்காவில் மருத்துவப் பொருள்கள் பற்றாக்குறையாக உள்ளது. இந்நிலையில் அமெரிக்க மாநில அரசுகளும் மருத்துவமனைகளும் மருத்துவப் பொருட்களை வாங்க போட்டியிட்ட குழப்பமான நிலைமை ஏற்பட்டது. முன்பு சுணக்கமாக இருந்ததன் பின்விளைவுதான் இது என்றும் நியூயார்க் டைம்ஸ் நாளேடு தெரிவித்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்