அமெரிக்க செய்தி ஊடகங்களை வெள்ளை மாளிகை குறை கூறுவதன் பின்னணி

வான்மதி 2020-04-15 17:17:47
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க நேரப்படி 13ஆம் நாள் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், பிப்ரவரி திங்கள் அமெரிக்க அரசு என்ன செய்து கொண்டிருந்தது? என்ற கேள்வி கேட்ட சிபிஎஸ் நிறுவனத்தின் செய்தியாளரை அரசுத் தலைவரான டிரம்ப் வன்மையாக குறைகூறினார்.

நியூயார்க் டைம்ஸ், சிஎன்என், என்பிசி, விஓஏ, பாக்ஸ் உள்ளிட்ட பல செய்தி நிறுவனங்கள் கடந்த சில நாட்களில் அவரால் விமர்சிக்கப்பட்டுள்ளன. அவை பற்றி டிரம்பு கோபம் அடைவதற்கான காரணத்தை, நியூயார்க் டைம்ஸ் நாளேட்டை எடுத்துக்காட்டாகக் கொண்டு புரிந்து கொள்ளலாம்.

அண்மையில் இந்நாளேட்டில் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றில், நியூயார்க்கில் ஏற்பட்ட புதிய ரக கரோனா வைரஸ் தொற்றானது, முக்கியமாக ஐரோப்பாவிலிருந்து வந்த பயணிகளால் ஏற்பட்டது என்றும், ஆக்கப்பூர்வமாக சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால் அமெரிக்காவில் வைரசைக் கண்டறிந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் காரணமாக நியூயார்க் டைம்ஸ் டிரம்பின் வன்மையான விமர்சனத்துக்கு உள்ளானது.

முன்னதாக வெள்ளை மாளிகை, அமெரிக்கரின் பணத்தைப் பயன்படுத்தி சீனாவுக்கு விளம்பரம் செய்வதாக விஓஏ மீது குற்றஞ்சாட்டியது. அமெரிக்க அரசின் நிதியுதவியைப் பெற்று வரும் விஓஏ, சீனாவுக்கு எதிரான முன்னணி ஊடகமாகச் செயல்படுவது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் வூஹானில் மேற்கொள்ளப்பட்ட முடக்க நடவடிக்கை, நோய் தொற்று தடுப்புக்கான முன்மாதிரி என்ற தகவலை வெளியிட்டதனால் இந்நிறுவனம் வெள்ளை மாளிகையால் குறைகூறப்பட்டது. சுதந்திரமான கருத்து வெளிப்பாட்டுரிமையில் அமெரிக்காவின் பொய்த்தன்மை மற்றும் இரட்டை வரையறையை இது வெளிப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் அமெரிக்கா, துல்லியமற்ற தகவல்களைக் கண்டு கோபமடையாமல், தனது அரசியல் கருத்துக்குப் புறம்பான கருத்தைக் கண்டால் மட்டுமே கோபமடையும் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதைப் புரிந்து கொள்ள முடியும். அதோடு, வெள்ளை மாளிகையின் கண்ணோட்டத்தில், சீனா மீதான குற்றச்சாட்டுகள் கொண்ட செய்திகள் மட்டுமே உண்மையானவை.

முன்னதாக, அமெரிக்க அரசுத் தலைவர் 13ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், கடந்த சில மாதங்களில் தாம் எடுத்த முடிவுகள் பற்றி காணொலி மூலம் அறிமுகம் செய்தார். பொதுத் தேர்தலுக்கான பிரசாரமாகக் கருதப்படும் இக்காணொலி, ஊடகங்கள் மற்றும் இணையப் பயனாளர்களின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்