கரோனா வைரஸ் பரவல் தடுப்பில் தடையை எற்படுத்தும் அமெரிக்காவின் முடிவு

பூங்கோதை 2020-04-16 11:25:08
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

புதிய ரக கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு, இவ்வைரஸ் தடுப்புக்கான சர்வதேச ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்கு உலகச் சுகாதார அமைப்பு ஈடிணையற்ற பங்கினை ஆற்றி வருகின்றது. ஏப்ரல் திங்களின் நடுப்பகுதி வரை, இவ்வமைப்பு 133 நாடுகளுக்கு 20 லட்சத்துக்கும் மேலான தனியார் பாதுகாப்பு வசதிகளையும், 126 நாடுகளுக்கு 10 லட்சத்துக்கும் மேலான சோதனைக் கருவிகளையும் வழங்கியுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முக்கிய கட்டத்தில் இருக்கும் இந்நிலையில், உலகச் சுகாதார அமைப்புக்கான நிதி ஒதுக்கீட்டை தற்காலிகமாக நிறுத்துவது என அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. இந்த முடிவால் அமெரிக்கா, சர்வதேச வாக்குறுதியை மீறியுள்ள அதேவேளை, சர்வதேச ஒத்துழைப்பையும் கடுமையாகச் சீர்குலைத்துள்ளதாக உலகின் பல்வேறு நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

ஒருதரப்புவாதத்தைப் பின்பற்றுகின்ற அமெரிக்கா, இத்தகைய முடிவை எடுக்கும் என்பதற்கான அறிகுறிகள் முந்தைய காலத்தில் காணப்பட்டுள்ளன. முறைப்படி, அந்நாடு 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 29ஆம் நாள் வரை, உலகச் சுகாதார அமைப்புக்கு வழங்க வேண்டிய 2019ஆம் ஆண்டுக்கான பணத்தொகையில் 70 விழுக்காட்டை இன்னும் வழங்கவில்லை. 2020ஆம் ஆண்டுக்கான பணத்தொகையையும் வழங்கவில்லை.

இது குறித்துப் பேசிய ஆய்வாளர்கள் பலர், கரோனா வைரஸ் பரவல் தடுப்புப்பணியை உலகச் சுகாதார அமைப்பு நன்றாக மேற்கொள்ளவில்லை என்ற அமெரிக்காவின் கூற்று, அந்நாடு உலகச் சுகாதார அமைப்புக்கு நிதி வழங்காமல் இருப்பதற்கான சாக்குப் போக்கேயன்றி வேறில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்