சீனப் பொருளாதாரம் வேகமாக மீட்சியடைகிறது

ஜெயா 2020-04-17 18:51:51
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் 17ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் மூன்று திங்களில் சீனாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 20 இலட்சத்து 65 ஆயிரத்து 40 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட, 6.8 விழுக்காட்டைக் குறைந்துள்ளது.

இந்த எண்ணிக்கை கணிக்கப்பட்ட மதிப்பீடு தான் எதிர்பார்ப்புக்குட்பட்டது. 2020ஆம் ஆண்டின் இந்த காலாண்டில் கொவைட்-19 நோய் பரவல் நிலவரத்தை சீனா எதிர்நோக்கியுள்ளது. குறுகிய காலத்தில் நோய் பரவலைக் கட்டுப்படுத்தியதால், பொருளாதார அதிகரிப்பு வேகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதே வேளையில், உலகளவில் நோய் பரவி வருகிறது. உலகில் நாடு கடந்த முதலீடு, சரக்கு வர்த்தகம், மக்கள் பரிமாற்றம் முதலியவை பெரிதும் குறைந்துள்ளன. பல நாட்டு நிறுவனங்கள் அதிகரிப்பு மதிப்பீட்டைக் குறைத்துள்ளன. இச்சூழலில், சீனப் பொருளாதாரத்தின் அதிகரிப்பு வேகத்தின் குறைவு இன்றியமையாத விளைவு ஆகும்.

தற்போது, நோய் பரவல் தடுப்பு நிலைமை சீராக வளரும் காலத்தில், சீன சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி நிதானத்தை நிலைநிறுத்தி, வேகமாக மீட்சியடையும் போக்கு தோன்றியுள்ளது.

பொருளாதார அதிகரிப்பு வேகம் வீழ்ச்சியடைந்த போதிலும், சீனாவின் முழு உற்பத்தி முறைமை பாதிக்கப்படவில்லை. தொழிற்துறையின் அடிப்படை, இணைப்பு ஆற்றல், திறமைசாலி மூலதனம் முதலிய மேம்பாடுகள் உள்ளன. மேம்பட்ட சரக்குப் போக்குவரத்து, போக்குவரத்து வசதிகள் முதலியவற்றைக் கூட்டு, பொருளாதாரத்தின் மத்திய மற்றும் நீண்டகால வளர்ச்சியை ஆதரிக்கும். மேலும், சீர்திருத்தம் மற்றும் திறப்பை சீனா தொடர்ந்து ஆழமாக்கி, புத்தாக்கத்தை முன்னேற்றி, பொருளாதார வளர்ச்சியின் ஆற்றல், உள்ளார்ந்த ஆற்றல் மற்றும் உயிராற்றலை இடைவிடாமல் ஊக்குவிக்கும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்