கைப்பேசி புதிய விவசாய கருவியாகவும், நேரலை புதிய விவசாயப் பணியாகவும் இருக்கும் சூழலில், சீனக் கிராமங்களின் புதிய வளர்ச்சி வாய்ப்பு!

மதியழகன் 2020-04-22 11:23:18
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மின்னணு வணிகம், புதிதாக வளர்ந்து வரும் தொழில் ஆகும். இதுவே, வேளாண் உற்பத்திப் பொருட்களின் விற்பனையை அதிகரிப்பதற்கும் விவசாயிகள் வறுமை நிலையில் இருந்து விடுபடுவதற்கும், கிராமங்கள் புத்துயிர் பெறுவதை முன்னெடுப்பதற்கும் உதவி அளிப்பதாக இருக்கிறது. இதனிடையில், அதிக வாய்ப்பு உருவாகும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஏப்ரல் 20ஆம் நாள் ஷான்சி மாநிலத்தின் ஜின்மீ கிராமத்தில் களஆய்வு மேற்கொண்டபோது தெரிவித்தார்.

ஷிச்சின்பிங்கின் இந்த பேச்சு, ஒரு புதிய வழிகாட்டுதல் ஆலோசனையை வழங்குவதாக இருக்கிறது. அதாவது, புதிய தொழில், நடைமுறைகளுக்கு ஏற்ற அடிப்படையில் பயன்பாட்டிற்கு வந்து ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். இவ்வாண்டு, சீனா தனது வறுமை ஒழிப்பு இலக்குகளை நனவாக்குவதற்கான முக்கிய ஆண்டாக திகழ்கிறது. கரோனா வைரஸ் பரவலால், பொருளாதாரச் சமூக வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த நோய் தொற்றைச் சமாளிக்கும் சூழலில், புதிய தொழில்கள் தோன்றி வளர்ந்து வருகின்றன.

“இணைய நேரலை மற்றும் மின்னணு வணிகம்” என்ற புதிய வணிக மாதிரி சீனாவின் நகரப்புறங்களில் விரைவாக வளர்ந்து, மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. தற்போது, இந்த புதிய மாற்றம், சீனாவின் பரந்த அளவிலான கிராமப்புறங்களுக்குப் பரவி வருகிறது.

எண்முறை என்பது, புதிய விவசாய மூலப்பொருளாகவும், கைப்பேசி, புதிய விவசாய கருவியாகவும், நேரலை, புதிய விவசாயப் பணியாகவும் மாறி வருகிறது. இதன் மூலம், கிராமப்புங்களில் இருக்கும் வேளாண்மைப் பொருட்கள், இணைய வாயிலாக புதிய விற்பனை வாய்ப்புகளை பெறும். மின்னணு வணிகம், வேளாண் துறையின் வளர்ச்சிக்கு அளித்த பயன் மற்றும் பங்களிப்பு, கரோனா தொற்று நோய் ஏற்பட்ட காலத்தில் மேலும் தெளிவாக காணப்பட்டுள்ளது.

இனி, வறுமை ஒழிப்புப் பணி, கிராமம் புத்துயிர் பெறும் முன்னேற்றப் போக்கு ஆகியவற்றில், மின்னணு வணிகம் மேலதிக மற்றும் பெரும் வாயப்புகளை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருப்புறம், சீனாவின் வறிய பகுதிகள் மற்றும் கிராமங்கள், பெரும்பான்மையாக, தொலைத்தூரத்தில் அமைந்துள்ளது. நிலவியல் காரணமாக, அதன் வளர்ச்சி வாய்ப்பு, வரம்புக்குள்ளானது. ஆனால், இணைய வழியாக, இந்த பகுதிகளில் இருந்து சிறந்த வேளாண் உற்பத்திப் பொருட்கள் நேரடியாக நாடளவில் விற்னை செய்ய வாய்ப்புள்ளது. விவசாயிகளின் வருமானம் அதிகரித்து வசிதான வாழ்க்கையை வாழ்ந்து, கிராமங்கள் வளர்ச்சி அடைவதற்கு, அது புதிய சாத்தியங்களை அளிக்கும். மறுப்புறம், புதிய தொழில்முறையாக விளங்கும் மின்னணு வணிகம், வேலை வாய்ப்புகளை உருவாக்கி, இளைஞர்கள் ஊருக்குத் திரும்பி சுயதொழில் புரிவதற்கு பயன்மிக்கதாக அமையும்.

நிச்சயமாக, வெவ்வேறு பகுதிகளில் வேறுபட்ட சூழல்களைக் காணலாம். எனவே, ஆக்கப்பூர்வமாக ஆலோசித்தால், வெவ்வேறு பகுதிகளின் நடைமுறைகளுக்கு ஏற்ப புதிய தொழில் மற்றும் புதிய செயல்பாடுகளின் மூலம் முனைப்புடன் ஈடுபடலாம். அதனால், புதிய வளர்ச்சி வாய்ப்பு கிடைப்பது உறுதி.

சீனாவின் கிராமப்புறங்களில் சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சி காணப்பட்ட பல ஆண்டுகளில், ஒவ்வொரு கிராமத்திலும், சாலை, மின்சாரம், , தொலைக்காட்சி, 4ஜி தொலைத்தொடர்பு ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. புதிய திட்டப்படி, 2022ஆம் ஆண்டுக்குள், அனைத்து கிராமங்களில், தூதஞ்சல் சேவை கிடைக்கும்.

எதிர்காலத்தில் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன், சீனாவில் மின்னணு வணிகம், மக்கள் வறிய நிலையில் இருந்து விடுபட்டு செல்வமடைந்து கிராமங்களின் புத்துயிர் வளர்ச்சி பெறுவதற்கு உதவியாக இருப்பது மட்டுமல்லாமல், சீரான சீனப் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய உந்து சக்தியாகவும் இருக்கும் என நம்புகின்றோம். மின்னணு வணகத்தின் மூலம் பொருளாதார வளர்ச்சியை மீட்பதிலும் வறுமை ஒழிப்புப் பணியை முன்னேற்றுவதிலும் உள்ள அனுபவங்களை சீனா உலக நாடுகளுக்கு பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்