அமெரிக்கா பொது சுகாதார நெருக்கடியால் சிக்கியுள்ள நிலையிலும் சீனாவுக்கு எதிரான கலச்சார போரை கொடுக்க டிரம்ப் முயற்சி

மதியழகன் 2020-04-25 15:07:35
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் உருவானது என்ற சதிக் கோட்பாட்டை டிரம்ப் ஊடகத்தில் எப்படி பரப்புகிறார் என்ற தலைப்பிலான கட்டுரை ஒன்று, அமெரிக்காவின் கிரேய்ஸான் என்ற செய்தி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கன்சர்வேடிவ் பிரிவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், அமெரிக்க அரசியல்வாதிகளுடன் இணைந்து செயல்பட்டு, சதியை எப்படி உண்மையாக மாற்ற முயன்றது என்பது தொடர்பான முழு விவரங்களும், இந்த கட்டுரையில் வெளியிடப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் கரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் டிரம்பும் அவரது கூட்டாளிகளும், சீனாவுக்கு எதிரான கருத்துக்களைப் பரப்ப முயல்கின்றனர். பிற நாட்டுடன் மோதலைத் தீவிரமாக்குவதன் மூலம், உள்நாட்டில் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டில் சந்தித்த தோல்வியை மூடி மறைக்க அமெரிக்காவின் வெள்ளை மாளிகை விரும்புகிறது என்று இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்படுகிறது.

அமெரிக்காவில் அரசுத் தலைவர் தேர்தல் நடைபெற இன்னும் 6 மாதக் காலம் உள்ளது. கடுமையான பொதுச் சுகாதார நெருக்கடியால், அமெரிக்கப் பொருளாதாரம் பின்னடைவை சந்திக்கக் கூடும். இந்நிலையில், சதிக் கோட்பாட்டுடன் கூடிய சீனாவுக்கு எதிரான கலாச்சாரப் போரை டிரம்ப் தொடுத்து வருகின்றார் என்று கிரேய்ஸான் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்