கொவைட்-19 நோயை எதிர்த்து போராட்டில் பொது மக்களின் கூட்டு முயற்சி

தேன்மொழி 2020-04-26 17:09:13
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கொவைட்-19 நோய் என்பது, சீனா மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின், பரவல் வேகம், பரவல் அளவு, தடுப்பு மற்றும் காட்டுபாட்டிலுள்ள இன்னல் ஆகியவை வரலாற்றில் கண்டிராத திடீர் பொது சுகாதார பேரிடராகும். இத்தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில், சீனா குறுகிய நேரத்தில் வெற்றிகரமாகவும் பயனுள்ள முறையிலும் இதைச் சமாளித்தது பற்றி சர்வதேச சமூகப் பிரமுகர்கள் பலர் ஆய்வு செய்து வருகின்றனர். உண்மையில், இந்தக் காரணம் மிகவும் எளிமை. அனைத்தும் மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும், அனைத்தும் மக்களைச் சார்திருக்க வேண்டும் என்ற கோட்பாடு தான் இது.

கடந்த ஜனவரி 23-ஆம் நாள், ஒரு கோடியே 10இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட வுஹான் நகரில் அனைத்து போக்குவரத்துக்கும் தடைவிதித்து நகரை முடக்க சீனா உத்தரவு பிறப்பித்தது. மனித குலத்தின் வரலாற்றில் மிக பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட பொது சுகாதார ரீதியிலான இந்த முடக்கு நடவடிக்கை, இந்நோயின் பரவலைத் தடுத்து கட்டுபடுத்துவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளது.

அமெரிக்காவின் “அறிவியல்”எனும் இதழ் மார்ச் 6-ஆம் நாள் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை ஒன்றில், சீனாவின் இந்த உத்தரவினால், கொவைட்-19 சீனப் பெருநிலப்பகுதியில் பரவிய போக்கு 3 முதல் 5 நாட்களாக தாமதமாக செய்யப்பட்டது. வுஹானுக்கு வருவதற்கான அனைத்து பயணங்களையும் சீனா தடை செய்ததால், கடந்த பிப்ரவரி திங்களின் மத்திய பகுதி வரை, வுஹான் நகரை தவிர பிற இடங்களில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 80விழுக்காடு குறைந்தது.

இதனிடையில், சீனா கொவைட்-19 நோய்க்கு எதிரான போராட்டத்தில், மருத்துவ மனைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இந்த இரு இடங்களிலும் எதையும் பொருட்படுத்தாமல், ஒற்றுமை, அர்ப்பணிப்பு, தியாகம் ஆகியவை வெளிப்படுத்தப்பட்டன.

“மாபெரும் பொறுப்பு உணர்வு” என்ற தலைப்பில் சீனாவின் ஒரு விநியோகஸ்தரின் நிழற்படத்தை, கடந்த மார்ச் 19-ஆம் நாள் டைம்ஸ் இதழ் முதல் பக்கத்தில் வெளியிட்டது. இவர் போன்றோர்கள் அபாயத்தைப் பொருட்படுத்தாமல், பொருட்களை விநியோகிக்காவிட்டால், பலரும் உணவுப் பொருட்கள் பற்றாக்குறையில் சிக்கி, நோயாளிகள் உயிரைக் காக்கும் மருந்துகளைப் பெற முடியாமல் போயிருக்கும் என்று இந்த இதழில் தெரிவிக்கப்பட்டது. உண்மையில், குடியிருப்பு பணியாளர்கள், தொண்டர்கள், தொழிலாளர்கள் போன்ற சீனாவின் பல்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த பொது மக்கள், தங்களது பணியில் ஈடுபட்டு, வைரஸை எதிர்த்து போராடி வருகின்றனர். 140கோடி மக்களின் கூட்டு முயற்சியுடன், கொவைட்-19 நோய் சீனாவில் பயனுள்ள முறையில் கட்டுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்