சமூக ஆற்றலைத் திரட்டி இன்னலைச் சமாளிக்கும் அனுப்பவம் பெற்ற சீனா

தேன்மொழி 2020-04-27 16:39:32
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

திடீரென ஏற்பட்ட தொற்று நோயைச் சமாளித்தபோது, கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் மருத்துவர்கள், மருத்துவச் சிகிச்சைப் பொருட்கள், மருத்துவமனைப் படுக்கைகள் உள்ளிட்டவை போதுமான அளவில் இல்லாமல் பற்றாக்குறையில் சிக்கி கொண்டன. இந்நிலைமையில், சீனா அவசரமாக அணி திரட்டுதலிலும் ஏற்பாடு செய்தலிலும் வலுமையான திறனைப் பெற்றிருந்ததால், குறுகிய காலத்தில் இந்த இன்னல்களைச் சமாளித்து, பயனுள்ள முறையில் வைரஸின் பரவலைத் தடுத்து கட்டுப்படுத்தியது.

ஹுபெய் மாநிலத்திலும் அதன் தலைநகர் வுஹான் நகரிலும் கொவைட்-19 வைரஸுக்கு எதிரான போராட்டத்தில், சீனாவின் பல்வேறு இடங்களிலிருந்து வந்த 42ஆயிரத்துக்கு மேலான மருத்துவப் பணியாளர்களைக் கொண்ட 330க்கும் அதிகமான மருத்துவச் சிகிச்சைக் குழுக்கள் சிகிச்சைப் பணியில் ஈடுபட்டனர். அதோடு, வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இயன்ற அளவில் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற வேண்டும் என்ற விதிமுறையின்படி, புதிய மருத்துவ மனைகளும் தற்காலிக மருத்துவ மனைகளும் வுஹான் நகரில் விரைவாக கட்டியமைக்கப்பட்டன. மனித உயிர்களுக்கு முக்கியத்துவமளித்து, சீனா கொவைட்-19நோயை எதிர்த்து போராடியது. பொது மக்களின் சிகிச்சை கட்டணம், மருத்துவகாப்பீட்டிலிருந்தும் தேசிய நிதியிலிருந்தும் செலுத்தப்பட்டது.

உலகில் எதுவும் குறையற்றதாக இருக்கும் நிலைமை இல்லை. கொவைட்-19 நோய் விரைவாக பரவியதுடன், வளர்ந்த நாடுகளும் வளரும் நாடுகளும் திடீர் பொது சுகாதார பேரிடரைச் சமாளிப்பதன் பற்றாக்குறை எழுந்தன. இது தொடர்பாக சீன அரசுத் தலைவர் கூறுகையில், இந்த பேரிடர் மூலம் பாடத்தைக் கற்று, தன்னை முழுமைப்படுவோம் என்று தெரிவித்தார்.

கடும் பேரிடருக்குப் பின் முக்கிய வரலாற்று முன்னேற்றம் காணப்படும். இந்த கடும் தொற்று நோய் முடிவு வந்த பின், சீனாவின் அமைப்பு முறையும் ஆட்சி திறனும் மேலும் முழுமைப்படுத்தப்படும். முன்னேற்ற பாதையில் சீனா இன்னலைச் சமாளிக்கும் மனவுறுதியும் மேலும் அதிகரிக்கும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்