அமெரிக்கக் குடியரசுக் கட்சியின் அபத்தமான நாடகம்

பூங்கோதை 2020-04-27 17:30:26
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்கக் குடியரசுக் கட்சியின் செனெட் அவை தொடர்பான கமிட்டி, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய குறிப்பாணை ஒன்றை, அந்நாட்டின் பாலிடிகோ என்னும் அரசியல் இணையதளம் அண்மையில் வெளியிட்டது. கரோனா வைரஸ் பற்றிக் குறிப்பிடும் போது, சீனாவைத் தாக்கவும் என்று அந்தக் குறிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் மற்றொரு அபத்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பில் அமெரிக்கக் குடியரசுக் கட்சி மீதான மக்களின் கோபத்தை இடமாற்றுவது, ஜனநாயகக் கட்சியைத் தாக்கி, பொதுத் தேர்தலுக்கு ஆயத்தம் செய்வது, சாக்குபோக்குகளைப் பயன்படுத்தி சீனாவின் வளர்ச்சியைத் தடுத்துக் கட்டுப்படுத்த முயல்வது ஆகியவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு அமெரிக்கக் குடியரசுக் கட்சி செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கரோனா வைரஸ் பரவலை அரசியலாக்குவதற்காக எடுக்கும் முயற்சிகளை அதனைத் தடுக்கப் பயன்படுத்தி இருந்தால் நாட்டின் நிலைமை இவ்வளவு மோசமாகி இருக்காது என்று இணையப் பயனாளர் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதோடு, அமெரிக்க அரசியல்வாதிகளின் கருத்தில், மக்களின் உயிரைக் காட்டிலும் அரசியல் நலனே எப்போதும் முக்கியமானது என்பதையும் இது எடுத்துக்காட்டியுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்