மருத்துவப் பொருட்களின் ஏற்றுமதியில் பொறுப்புணர்வுடன் செயல்படுகிறது சீனா

2020-04-27 17:38:30
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கொவைட்-19 நோயை எதிர்த்து போராடுவதில், முக கவசம், பாதுகாப்பு கவசம், செயற்கை சுவாச கருவி போன்றவை முக்கிய மருத்துவப் பொருட்களாகும். கொவைட்-19 நோய் பரவலைத் தடுப்பதில் பொது மக்களுக்கு முக கவசம் அணிதல், பாதுகாப்பு அம்சங்களில் முக்கிய வழிமுறையாகும்.

உலகளவில் கொவைட்-19 நோயை எதிர்த்து போராடுவதற்கு சீனா தனது பங்களிப்பை வழங்கி வருகிறது. பல்வேறு வழிகளிலும், சீனா பன்னாட்டு சமூகத்திற்கு இயன்ற ஆதரவுகளையும் உதவிகளையும் அளித்து வருகின்றது. ஆனால், சீனா மருத்துவப் பொருட்களின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிப்பது என்ற தவறான தகவல் எழுந்துள்ளது.

இது குறித்து, சீன வணிக அமைச்சகம் 26ஆம் நாள் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில்,

சீனாவில், கொவைட்-19 தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணி இன்னும் கடினமானது. இருப்பினும், சீனா பல்வேறு வழிகளின் மூலம் பன்னாடுகளுக்கு ஆதரவு மற்றும் உதவி வழங்கி வருகிறது. நோய் தடுப்புப் பொருட்களின் ஏற்றுமதியை சீனா எப்போதும் கட்டுப்படுத்தவில்லை. உலக நாடுகளின் கொள்முதல் நடவடிக்கைகைகளுக்கு சீனா வசதி ஏற்படுத்தி, ஆதரவு அளித்து வருகிறது என்று தெரிவித்தார்.

எடுத்துக்காட்டாக ஏப்ரல் 24ஆம் நாள், சீனாவில் இருந்து 106கோடி முக கவசங்கள் அனுப்பப்பட்டுள்ளன. மருத்துவப் பொருட்களின் ஏற்றுமதி எண்ணிக்கையை அகிகரிக்கும் அதேவேளையில், பொருட்களின் தர நிர்ணயத்தை மேம்படுத்துவதற்கு சீனா மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.

கொவைட்-19 நோய் தடுப்புப் பொருட்கள், மக்களின் உயிர் காப்பு பொருட்களாகும். எனவே, பொருட்களின் தரப் பாதுகாப்பு மிக முக்கியமானது. அதில் சீனா கவனக்குறைவாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மருத்துவப் பொருட்களின் தரக் கண்காணிப் தீவிரமாக்கப்பட்டு வருகிறது. இதில் பயனுள்ள முன்னேற்றம் அடைந்துள்ளது. தற்போது, மருத்துவ பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற முக கவசங்களின் ஏற்றுமதி எண்ணிக்கை அதிகம். ஆனால், சீனாவுக்கும் வெளிநாடுகளுக்கும் இடையே, தர நிர்ணயம், மற்றும் பயன்படுத்தும் வழக்கம் ஆகியவற்றில் வேறுபாடு காணப்படும். எனவே, தர நிர்ணயம் குறித்து குழப்பம் எழுந்துள்ளது. கூடுதலாக, மருத்துவ ரீதியில் பயன்படுத்தக்கூடிய முக கவசம் மற்றும் சாதாரண முக கவசம் ஆகியவற்றுக்கிடையே குழப்பமும் ஏற்பட்டுள்ளது. இத்தைகய பிரச்சினைகளைத் தீர்க்கும் விதமாக, சாதாரண முக கவசங்களின் தர நிர்ணயக் கண்காணிப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளது. பயனுள்ள நடவடிக்கைகளின் மூலமாக, நோய் தடுப்புக்கான ஏற்றுமதி பொருட்களின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம், சீனா பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறது. உலகின் பொது சுகாதார நெருக்கடியைச் சமாளிப்பதில் சீனா தனது பங்களிப்பை வழங்கி வருகிறது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்