உண்மையில் தொற்று நோய் பற்றிய தகவல்களை மூடி மறைப்பது யார்?

மதியழகன் 2020-04-27 18:54:37
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, தன் தலைமைப் பொறுப்புக்கேற்ற திறமையை வெளிக்காட்டுவல்லை. அது மட்டுமல்லாமல், அவர் கொவைட்-19 தொற்று நோய் பரிவி வரும் நிலையிலும் சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகளைக் குறைகூறி தாக்க முயல்கின்றார். இச்செயல், நோய் தடுப்புக்கான சர்வதேச ஒத்துழைப்பை பெருமளவில் பாதித்துள்ளது. ஆனால், ஒத்துழைப்பு தற்போதுள்ள மிக அவசியமானது என்று அமெரிக்காவின் போலிடிக்கோ செய்தி இணையதளத்தில் விமர்சித்துள்ளது.

இத்தகைய விமர்சனம் அமெரிக்காவில் ஒலி அலையை போல உருவாக்கி வருகிறது. தற்போது, மைக் பாம்பியோ பொதுவான இலக்காக மாறுகின்றார் ஏன்?

கொவைட்-19 தொற்று நோய் ஏற்பட்ட பிறகு, அமெரிக்க வெளியுறவு அமைச்சராக அவர் நோய் தடுப்பில் அவர் எந்த திறமையான நடவடிக்கையையும் மேற்கொள்வில்லை. மாறாக, தினமும் சீனா மீது அவதூறு பரப்புவது அவரது முக்கிய பணியாக இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பொறுப்பை தட்டிக்கழிப்பதற்காகவும், பொது மக்களின் கோபத்தை மறைப்பதற்காகவும், பாம்பியோ இத்தகைய தீய நோக்கத்துடன் கொவைட்-19யை வுஹான் வைரஸ் என குறிப்பிட்டார்.

மேலும், சீனா நோய் தகவல்களை மறைத்ததாகவும், அவர் குறைகூறினார். உண்மையிலேயே, தொற்று நோய் ஏற்பட்ட பிறகு, சீனா உடனடியாக உலக சுகாதார அமைப்பிடம் தகவல்களைத் தாக்கல் செய்துள்ளதோடு, உலக நாடுகளுடன் புதிய கரோனா வைரஸின் மரபணுக்களின் தொகுதியைப் பகிர்ந்து கொண்டது.

சமீபத்தில், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில், உயிரிழந்தோர் இருவருக்கு ஜனவரி திங்கள் கொவைட்-19 தொற்று ஏற்பட்டிருக்க சாத்தியம் அதிகம். அவர்கள் சீனாவில் பயணம் மேற்கொள்ளவில்லை. ஹார்வர்டுபல்கலைக்கழகத்தின் உலக சுகாதார ஆய்வுக் கழகத்தின் தலைவர் கொவைட்-19 மேலும் முன்கூடியே அமெரிக்காவில் பரவ வாய்ப்புள்ளது என்று மதிப்பீடு செய்தார். முன்பு, அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் ராப்ரட் ரேட்ஃபில்ட் வெளிப்படையாக பேசுகையில், கடந்த ஆண்டு செப்டம்பர் திங்களில் காய்ச்சலால் உயிரிழந்தோரில் சிலருக்கு கொவைட்-19 நோய் பாதிப்பு இருந்ததை உறுதி செய்தார்.

உண்மையில், நோய் பரவல் பற்றிய தகவல்களை யார் மூடி மறைத்து வருகின்றனர்?அமெரிக்காவில் இந்த நோய் தகவல்களைப் பற்றி, பாம்பியோ துணிவுடன் பன்னாடுகளுக்கு வெளிப்படையாக பதில் அளிக்க முடியாமா?

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்