கொவைட்-19 நோயைச் சமாளிப்பதில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் என்ன செய்துள்ளார்?

மதியழகன் 2020-04-28 20:05:29
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலகளவில் கொவைட்-19 தொற்று நோய் வேகமாக பரவி வரும் நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது.

முதலில், உலக சுகாதார அமைப்புக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்துவதில் பாம்பியோ கவனம் செலுத்தியுள்ளார். அவரின் இச்செயல், உலகின் நோய் தடுப்பு குறிப்பாக வளர்ச்சி அடையாத நாடுகள் மற்றும் பலவீனமான குழுக்கள் நோயைச் சமாளிப்பதற்கு கடும் தீங்கு விளைவிக்கும்.

இரண்டாவதாக, நோயைச் சமாளிப்பதில் அமெரிக்காவின் திறமையற்ற செயல்களை மறைக்கும் விதமாக, சீனாவைக் குற்றச்சாட்டி, வேண்டுமென்றே பகைமையை ஏற்படுத்தி, நோய் எதிர்ப்புக்கான சர்வதேச ஒத்துழைப்பைக் சீர்குலைப்பதில் பாம்பியோ ஈடுபட்டுள்ளார்.

மூன்றவதாக, நோயினால், முழு மனித சமூகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், பாம்பியோவின் இச்செயல்களால், ஈரான், கியூபா உள்ளிட்ட நாடுகளின் மீது அமெரிக்க அரசு அதிகப்பட்சமாக அழுத்தம் கொடுத்துள்ளது. இந்நிலையில், மனிதநேய ரீதியிலான பேரிடர் கூடுதலாக ஏற்படும்.

நான்குவாதாக, அமெரிக்காவின் உள்நாட்டில் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்க்கைகள் எதையும் பாம்பியோ மேற்கொள்ளவில்லை. மக்களின் உயிர்களைப் பொருட்படுத்தாமல், அரசியல் ரீதியிலான சுயநலனை மட்டும் அவர் கருத்தில் கொள்கிறார்.

மைக் பாம்பியோவின் செயல்களே அமெரிக்க மக்களின் நம்பிக்கையையும் அமெரிக்க தூதாண்மைப் புகழையும் இழந்து விட்டுள்ளன. கொவைட்-19 நோயை எதிர்த்து போராடுவதற்கான சர்வதேச ஒத்துழைப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்க மக்கள் மற்றும் சர்வதேச நாடுகள் சந்தித்த இழப்புகளுக்கு அவர் பொறுப்பேற்க வேண்டியது அவசியம் ஆகும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்