கொவைட்-19 நோய் தொற்று பரவலைத் தடுப்பதில் சீன மக்களின் பங்களிப்பு

மதியழகன் 2020-04-29 18:49:58
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2020ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் நாள் முதல் கொவைட்-19 நோய் தொற்று பரவலைத் தடுத்து நிறுத்தும் வகையிலும் பொது சுகாதரா நெருக்கடியைச் சமாளிப்பதற்காகவும், சீனாவின் வுஹான் நகரில் பெருளவிலான முடக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நோய் தடுப்புற்காக, வுஹான் நகரவாசிகள் பொறுப்பு மற்றும் அர்ப்பணிப்புஉணர்வுடன் பங்காற்றி வருகின்றனர்.

உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநரின் உயர்நிலை ஆலோசகர் ப்ரூஸ் அல்வார்டு சீனாவில் களஆய்வு மேற்கொண்ட பிறகு பேசுகையில்,

வுஹானின் சாலைகளில் வெறிச்சோடி காணப்படுகிறது. இருப்பினும், ஒவ்வொரு வீட்டின் சன்னல்களுக்கு பின்புறத்தில் நகரவாசிகள் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புடன் நடந்து வருகின்றனர். சீன மக்கள், அதிசயமான கூட்டு நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்பு மனப்பான்மையை வெளிக்காட்டுகின்றனர் என்று தெரிவித்தார். சீன மக்களின் அர்ப்பணிப்பு, பெருமளவில் கொவைட்-19 நோய் தொற்று பரவலைக் குறைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐ.நா. தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்ரெஸ், நோய் தடுப்புக்காக சீன மக்கள் தியாகம் மற்றும் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்று கூறினார்.

சீனா குறுகிய காலத்தில் கொவைட்-19 நோயைக் கட்டுப்படுத்துவதற்கு, அறிவியல் சார்ந்த துல்லியமான மற்றும் வலிமையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற அரசின் முயற்சிகளைத் தவிர, சீன மக்களின் பொறுப்பு மற்றும் அர்ப்பணிப்புணர்வுகளும் முக்கிய பங்காற்றியுள்ளது.

சிறந்த பாரம்பரியக் கலாச்சாரம், ஒரு நாடு மற்றும் ஒரு தேசம் தொடர்ந்து வளர்ந்து வருவதன் அடிப்படையாகும். சீனப் பாரம்பரிய கலாச்சாரத்தில், பேரிடர்களை எதிர்கொண்டு சமாளித்து, ஒரு தேசம் மேலும் வலிமையாக இருப்பது என்ற கருத்து உண்டு. நோய் எதிர்த்து தோற்கடிப்பதில் சீன மக்களுக்கு நம்பிக்கையை அத்தகைய கலாச்சாரம் ஊட்டியுள்ளது.

மேலும், சீனப் பண்பாட்டில், “யாதும்ஊரேயாவரும் கேளீர்” போன்ற ஒரே மாதிரியான சிந்தனை உண்டு. எனவே, கொவைட்-19 நோயை எதிர்த்து போராடுவதில், சீனாவும் பல்வேறு நாடுகளும் ஒன்றுக்கொன்று உதவி அளித்து வருகின்றன.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்