எவ்ளவு நோய் தகவல்களை மறைப்பது அமெரிக்க அரசியல்வாதிகள்?

தேன்மொழி 2020-04-29 20:44:56
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்காவில் கரோனா வைரஸ் (கொவைட்-19) எப்போது பரவக் தொடங்கியது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தின் சாண்டா கலாரா கவுன்டியிலுள்ள குடியிருப்பு பகுதியில் கரோனா வைரஸ் பரவியிருக்க சாத்தியம் உண்டு என்று இந்த கவுன்டித் தலைமை நிர்வாக அதிகாரி உள்ளூர் நோய் கட்டுப்பாட்டுத் துறையின் தகவலை மேற்கோள் காட்டி கூறினார்.

கரோனா நோய் தொற்று அமெரிக்காவில் ஏற்பட்ட நேரம் குறித்து, அமெரிக்க அரசு தகவல் வெளியிடும் முன்பே அங்கு அது இருந்ததை, மேலதிக சான்றுகள் காட்டுகின்றன. உள்நாட்டில் நோய் தொற்று பரவியது குறித்து அமெரிக்க அரசுக்கு எதுவும் தெரியவில்லையா? எத்தனை பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது? அமெரிக்காவில் தொற்று நோய் பற்றிய தரவுகள் எவ்ளவு வெளிப்படையாக இருந்தன? கரோனா தொற்று நோயை வெறும் காய்ச்சல் என்று மறைக்க அமெரிக்கா முயன்றுள்ளதா? ஆகிய சந்தேகங்கள் அடுத்தடுத்து எழுந்துள்ளன. இது, அமெரிக்காவின் உள்நாட்டில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையைச் சமாளிப்பதற்கு, அமெரிக்க அரசு தந்திரத்தைச் செயல்படுத்தி, பிற நாட்டைக் குற்றஞ்சாட்டுவதன் மூலம் பொறுப்பைத் தட்டிக்கழிக்க முயல்கிறது.

கொவைட்-19 நோய் பரவலைச் சமாளித்து வரும் அமெரிக்காவில் ஐயத்துக்குரிய இடங்கள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்கா, தனது நாட்டின் பொது மக்களின் உயிரைக் காக்கவும், உலகின் பொது சுகாதாரப் பாதுகாப்பைப் பேணிக்காக்கவும், வெகுவிரைவில் தொற்றுநோய்க்கான ஆய்வை துவங்கி வைக்க வேண்டும்.

தற்போது, அமெரிக்காவில் கொவைட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து இலட்சத்தைத் தாண்டியுள்ளது. தொற்று நோயைக் கட்டுப்படுத்துவது கடினமான நிலைமையில் உள்ளது. தன்னுடைய பொறுப்பைத் தட்டிக் கழித்து பிற நாடுகளைக் குறைகூறுவதன் மூலம், தன் தவறை மறைக்க முடியாது. இச்செயல், கடந்து போன நேரத்தையும் உயிரிழப்பையும் மீட்க உதவாது. அமெரிக்க அரசியல்வாதிகள் அரசியல் தந்திரத்தை கைவிட்டு பொது மக்களின் உயிர் பாதுகாப்பில் மேலும் கவனம் செலுத்த வேண்டும். வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுபாட்டுப் பணியில் உள்ள குழப்பங்கள் பற்றி, அமெரிக்க மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கு விரைவில் பதில் அளிக்க வேண்டும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்