அமெரிக்காவில் கரோனா வைரஸின் பெரும் பரவலுக்கு பாம்பியோ பொறுப்புகள்

மதியழகன் 2020-04-30 21:14:23
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கரோனா (கொவைட்-19) நோய் தொற்று பரவலை எதிர்த்து போராடுவதில், உலக சுகாதரா அமைப்பு மீது அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ 29ஆம் நாள் மீண்டும் குற்றச்சாட்டியதோடு, இந்த அமைப்பு மீது விசாரணை மேற்கொள்ளப் போவதாகவும் அச்சுறுத்தினார். தற்போது, அமெரிக்காவில், கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10லட்சத்தைத் தாண்டியுள்ளது. அமெரிக்க குடிமக்களின் உயிரை மீட்பதில் அவர் கவனம் செலுத்தவில்லை. மாறாக, பல்வகை வழிமுறையிலும் தனது பொறுப்பைத் தட்டிக்கழித்து, உலக சுகாதார அமைப்பு மீது அரசியல் ரீதியிலான அச்சுறுத்தலை ஏற்படுத்த முயல்கின்றார். முழு உலகின் எதிர் திசையில் அவர் நிற்கினார்.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையத்தின் உலக குடியேற்ற மற்றம் நோய் சோதனைப் பிரிவுத் தலைவர் மார்டின் செட்ரான், ஜனவரி திங்களின் இறுதியில் கரோனா தொற்று நோயை சர்வதேச கவனத்துக்குரிய எதிர்பாராத பொது சுகாதார பேரிடராக அறிவிப்பது குறித்து உலக சுகாதார அமைப்புக்கு ஆலோசனை வழங்கினார்.

அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பு தகவலை பெறுவதற்கு எந்த தடையும் இல்லை என்பது தெளிவாக காணப்பட்டுள்ளது. ஆனால், மார்ச் 13ஆம் நாளுக்குப் பிறகு மட்டும், தேசிய அவசர நிலையை அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்தது ஏன்? உலக சுகாதார அமைப்பு உலகளாவிய முன்னெச்சரிக்கை விடுத்ததை முதல், 40-க்கும் அதிக நாட்கள் கடந்து விட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் முன்னெச்சரிக்கைக்கு அவர் எந்த கவனத்தையும் செலுத்தவில்லை. அவரது செயல்கள், அமெரிக்காவில் கரோனா நோய் தொற்று பெருமளவில் பரவுவதற்கு காரணமாகியிருப்பதாக கருதப்படுகிறது.

அறிவியல் சார்ந்த கோணத்தில் இருந்து பார்த்தால், நோய் தொற்றின் மூலத்தையும், பரவும் வழியையும் துண்டிப்பதே, தொற்று நோயைச் சமாளிப்பதற்கான முக்கிய வழிமுறையாகும். இதைக் கருத்தில் கொண்டு, சீனா, ஜனவரி திங்கள் வுஹானில் இருந்து வெளியேறும் போக்குவர்த்துகளையும் மூடி, சில பகுதிகளின் குடியிருப்புகளில் ஊடரங்கு நடவடிக்கை விதித்துள்ளது. அது, நோய் தொற்று பரவலை பெருமளவில் குறைத்தது.

ஆனால், சீனாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் மைக் பாம்பியோ, சீனாவின் நடவடிக்கைகளை அறிந்து கொள்ள முற்றிலும் விரும்பவில்லை. உலக சுகாதார அமைப்பு சீனவை ஆதரிப்பதாக குறைகூறுவதில் ஆவலுடன் ஈடுபட்டு வருகின்றார். அதன் விளைவாக, அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தவறான அரசியல் கருத்துக்களைக் கடைப்பிடித்து வரும் பாம்பியோ, உலக சுகாதார அமைப்பின் முன்னெச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் அமெரிக்க மக்களுக்கு தவறாக வழிகாட்டினார்.

உலகின் ஒரேயொரு சூப்பர் வல்லசராக இருக்கும் அமெரிக்காவில் கரோனா பாதித்தவர்கள் மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கைகள் மிக அதிகமாக இருப்பது ஏன் என்ற சர்வதேச சமூகத்தின் கேள்விக்கு, பாம்பியோவின் இச்செயல் தக்க பதில் தருகிறது.இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்