கரோனா தொற்று நோய்க்கு எதிரான போராட்ட வீரர்கள் - பொது மக்கள்

மதியழகன் 2020-05-01 14:54:57
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இன்று மே 1-ஆம் நாள், சர்வதேச தொழிலாளர் தினமாகும். இது, தொழிலாளர்களைச் சார்ந்த கொண்டாட்டத் தினமாகும்.

கரோனா நோய் தொற்று (கொவைட்-19) ஏற்பட்ட சூழலில், இவ்வாண்டு இந்தத் தினம் வழக்கம் போல இல்லை. கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக, கரோனா தொற்று நோய்க்கு எதிராக சீனா கடினமான போராட்டம் நடத்தியுள்ளது. வுஹான் மாநகரம், ஹுபெய் மாநிலம், சீனா முழுவதிலும் நோய்க்கு எதிரான போராட்டத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது. இது, 140கோடி பொது மக்கள் ஒற்றுமையுடன் படைத்துள்ள சாதனையாகும். இந்த போராட்டத்தில் உண்மையான வீரர்கள், பொது மக்கள் ஆவர்.

கரோனா நோய் தொற்று பரவிய சூழலில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணி, நெருக்கமாக பொது மக்களைச் சார்ந்திருக்க வேண்டும் என்றும், மக்களின் பாதுகாப்பு மற்றும் உயிரை முதன்மையாக கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுத்து நிறுத்தும் வகையில், சீனா நகரப்புறங்களிலும் கிராப்புறங்களிலும் நோய் தடுப்பு வலைப்பின்னலை வேகமாக உருவாக்கியது. 40லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களும் தன்னார்வலர்களும், 6.5 இலட்சம் குடியிருப்புகளில், நோய் பரவல் கண்காணிப்பு, வாயில் நுழைவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரோனா தொற்று நோயை எதிர்த்து போராடுவதில், 140 கோடி சீனர்கள், தத்தமது பதவியில் இருந்து தனக்குரிய முயற்சியை எடுத்துள்ளனர். ஒவ்வொரு உழைப்பாளரும் இதை நினைவு கொள்ளத் தக்கது. எடுத்துக்காட்டாக, வுஹான் நகரில் துவக்கப் பள்ளியில் இசை ஆசிரியாரான ஹுவா யுச்சென் தன்னார்வலராகவே, வாகனம் ஓட்டுதல, உடல்வெப்பப் பரிசோதனை, தற்காலிக மருத்துவமனையில் தகவல் அறிவிப்பு உள்ளிட்ட பல பணிகளில் ஈடுபட்டுள்ளார். பெய்ஜிங்கில், விநியோகம் செய்யும் நபராக, காவ் ஸிசியௌ, சிறந்த குறிக்கோள் உணர்வுடன் அமெரிக்காவின் டைம்ஸ் வார இதழில் முதல் பக்கதில் இடம்பெற்றார். நான்ஜிங்கில், ஒரு முக கவச உற்பத்தி நிறுவனத்தில், 15 தொழிலாளர்கள் ஒரு நாளுக்கு 80ஆயிரம் முக கவசங்களைத் தயாரித்தனர். அவர்களைப் போன்ற சீனாவின் சாதாரணமான உழைப்பாளர்களின் கதையை படித்தால், கரோனா நோய்க்கு எதிரான போராட்டத்தில் சீனா வெற்றி பெறுவதற்கான காரணங்களைத் தெளிவாக அறிய முடியும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்