தீய நோக்கத்துடன் வதந்திகளைப் பரப்பும் அமெரிக்க அரசியல்வாதி

வான்மதி 2020-05-04 17:33:37
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

புதிய ரக கரோனா வைரஸ் இயற்கையாக உருவானது என்ற உடன்பாட்டுக்கு உலக அறிவியல் துறையினர் வந்துள்ளனர். ஆனால், அமெரிக்க அரசியல்வாதிகள் பொய்க்கூற்றை திரும்பத் திரும்ப கூறி, ஆய்வுக்கூடத்திலிருந்து தான் வைரஸ் கசிந்தது என்பது போன்ற வதந்திகளை மீண்டும் மீண்டும் பரப்பி வருகின்றனர்.

வைரஸ் கசிவு தொடர்பான சான்றுகளைக் கொண்டுள்ளதாக அல்லது கண்டுள்ளதாக என்று தெரிவித்துள்ள அவர்கள், தற்போது வரை எந்த சான்றுகளையும் வெளிக்காட்ட முடியவில்லை.

அமெரிக்க அரசுத் தலைவர் சான்றுகளைக் கண்டுள்ளேன் என்று தெரிவித்ததற்குச் சற்று முன்னரே, அமெரிக்க தேசிய உளவுத் துறையின் இயக்குநர் பணியகம் வெளியிட்ட அறிக்கையில், புதிய ரக கரோனா வைரஸ் செயற்கை அல்ல. மரபணு திருத்தமும் அல்ல என்று தெரிவிக்கப்பட்டது. இவை நகைமுரணாக உள்ளன.

மேலும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், உளவு நிறுவனத்தின் ஆய்வு முடிவை ஒப்புகொள்வீர்களா என்ற கேள்விக்கு முதலில் “ஆம்” என்று பதிலளித்தார். ஆனால் இவ்வைரஸ் செயற்கை அல்ல என்பதை நம்புகிறீர்களா என்று கேட்கப்பட்ட போது, கேள்விக்கு தொடர்பில்லாதவற்றைத் தெரிவித்தார். இது குறித்து அமெரிக்க இணையப் பயனாளர் பலர் கூறுகையில், தாம் கூறியது என்ன என்றும் அவருக்குத் தெரியாது. அவர் வரலாற்றில் மிக மோசமான வெளியுறவு அமைச்சர் என்பதில் ஐயமில்லை என்று தெரிவித்தனர்.

அமெரிக்க அரசியல்வாதிகளின் அபத்தமான பேச்சுகளில் இருப்பது, பொய்க்கூற்று மட்டுமே. வைரஸ் தோற்றம் பற்றிய சதித்திட்டம், மிக முன்னதாகவே சர்வதேச அறிவியல் மற்றும் பொது சுகாதார துறையினர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று, இயற்கைச் சீற்றம் ஆகும் என்பது சர்வதேச சமூகத்தில் இருக்கும் பொது அறிவு.

அமெரிக்க அரசியல்வாதிகள் குறைகூறி வரும் வூஹான் வைரஸியல் ஆய்வகம் நிறுவப்பட்டது முதல் தற்போது வரை, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் அறிவியலாளர்களை அது உபசரித்துள்ளது. இந்த ஆய்வகத்தின் ஆய்வாளர் யூன் ச்சீமிங் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில், புதிய ரக கரோனா வைரஸை வடிவமைத்து உருவாக்கும் அளவுக்கு இந்த ஆய்வகத்துக்கு திறமை இல்லை. ஒருபோதும் அப்படிச் செய்யவில்லை என்றும், ஆய்வகத்தின் கீழுள்ள ஆய்வுக்கூடம் உயிரி பாதுகாப்பு நடைமுறையைக் கண்டிப்பான முறையில் கடைப்பிடித்து வருவது, சர்வதேச அறிவியல் துறையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

அமெரிக்க அரசியல்வாதிகள் அரங்கேற்றிய கேளிக்கை நாடகங்களுக்குப் பின் தீய நோக்கம் உள்ளது. பஸ்ஃபீட்(Buzzfeed) எனும் அமெரிக்காவின் இணைய ஊடகம் அண்மையில் வெளியிட்ட கட்டுரை ஒன்றில், இத்தகைய செயல்கள் அமெரிக்க அரசு தலைவர் மற்றும் அவருக்கு ஆதரவளிக்கும் நபர்களின் அரசியல் நலனுக்கு நன்கு பொருந்துகிறது என்று சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்