சர்வதேசப் புலனாய்வு செய்யப்பட வேண்டிய அமெரிக்கா

பூங்கோதை 2020-05-05 19:03:43
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அண்மையில், மைக் பாம்பியோ உள்ளிட்ட அமெரிக்க அரசியல்வாதிகள், உள்நாட்டிலுள்ள அபாயகரமான கரோனா வைரஸ் நிலைமையைப் பொருட்படுத்தாமல், வதந்திகளைத் தொடர்ச்சியாகப் பரப்பி வருவதுடன், வூ ஹான் வைரஸியல் ஆய்வகத்தின் மீது சர்வதேசப் புலனாய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தனர். உண்மையில், அமெரிக்கா மீதான சர்வதேசப் புலனாய்வை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க முக்கிய ஊடகங்கள் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

உலகின் தலைசிறந்த மருத்துவ வசதிகள் கொண்ட அமெரிக்காவில், கரோனா வைரஸால் பாதிக்கப்படோர் மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மிக அதிகம். உலகளவில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பில் இது கடுமையான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மக்களால் நம்பமுடியாதது.

முதலில், மக்களின் கோரிக்கை மற்றும் கவனத்துக்கு மறுமொழி அளிக்கும் வகையில், உலகச் சுகாதார அமைப்பு உள்ளிட்ட நிறுவனங்கள், டெட்ரிக் உயிரின ஆய்வகத்தில் புலனாய்வு செய்வதை அமெரிக்கா ஒப்புக்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, அமெரிக்கா, காய்ச்சலைச் சாக்குப்போக்காக கொண்டு, கரோனா வைரஸ் பரவலை மூடிமறைத்துள்ளதா இல்லையா என்பது பற்றி, அமெரிக்கா சர்வதேச நிறுவனங்களுடன் ஒத்துழைத்து ஆய்வு செய்ய வேண்டும்.

மூன்றாவதாக, அமெரிக்காவில் கரோனா வைரஸ் எப்பொழுது தோன்றியது என்பதைத் தெளிவாகப் புலனாய்வு செய்ய வேண்டும்.

பிற நாடுகளின் செயல்களைச் சரி செய்ய விரும்பினால், சொந்த தவறுகளை முதலில் திருத்த வேண்டும். ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின்படி, அமெரிக்காவின் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளிலுள்ள உயிரின ஆய்வகங்கள் மிகவும் அபாயமானவை. இத்தகைய ஆய்வகங்களில், சர்வதேச சமூகத்தின் அறிவியல் பூர்வமான புலனாய்வு செய்யப்பட வேண்டும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்