மே தின விடுமுறையில் மீட்சி அடைந்து வரும் சீனப் பொருளாதாரம்

மதியழகன் 2020-05-06 17:36:44
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மே தின விடுமுறையில் சீனாவின் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணங்களின் எண்ணிக்கை 11.5 கோடியை எட்டியுள்ளது. கரோனா நோய் தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு சீனாவில் முதலாவது விடுமுறை இது தான். 10கோடிக்கும் மேற்பட்டோர் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர். உள்நாட்டின் சுற்றுலா சந்தை உச்ச நிலை அடைந்துள்ளது. இதைப் பார்க்கும் போது, கரோனா தொற்று நோயின் பாதிப்பு குறுகிய காலமாக மட்டும் நீட்டித்து, சீன மக்களின் நுகர்வுத் தேவை சீனப் பொருளாதார மீட்சியை விரைவுப்படுத்துவது என்ற பன்னாட்டுப் பொருளியலாளர்களின் மதிப்பீடு நிரூபணமாகியுள்ளது.

நுகர்வுத் துறை, பல ஆண்டுகளாக தொடர்ந்து சீனப் பொருளாதார வளர்ச்சியின் முதல் உந்து சக்தியாகி வருகிறது. குறிப்பாக, விடுமுறை நாட்களில் நுகர்வின் பங்களிப்பு தெளிவாக காணப்பட்டுள்ளது. இது, சீனப் பொருளாதாரத்தின் நெகிழ்வுத்தன்மையையும் வளர்ச்சி சாத்தியத்தையும் வெளிக்காட்டுகிறது.

சீனர்களின் ஞானத்தில், நெருக்கடி மற்றும் வாய்ப்பு ஆகிய இரண்டும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து காணப்படும். கரோனா தொற்று நோயால் ஏற்பட்ட உலகளாவிய பொது சுகாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் போது, சீனப் பொருளாதாரம் மீட்சித் திறனையும் நெகிழ்வுத்தன்மையையும் காட்டுகிறது. இந்த போக்கில், புதிய தொழில் வாய்ப்புகள் தோன்றியுள்ளன. சீனப் பொருளாதாரத்தின் நீண்டகால சீரான வளர்ச்சிப் போக்கு மாறவில்லை என்பதை இவை நிரூபிக்கும்.

தற்போது, உலகளவில் நோய் தடுப்புப் பணி இன்னும் கடும் நிலையில் சிக்கி உள்ளது. இதனிடையில் எந்த ஒரு நாடும் தனிமையாக அதைச் சமாளிக்க முடியாது. இந்நிலையில், நோய் தடுப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகிய துறைகளில் சர்வதேச ஒத்துழைப்பு நடக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தான், முழு உலகமும் வெகுவிரைவில் நோய் பாதிப்புகளில் இருந்து விடுபட முடியும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்