அமெரிக்க அரசியல்வாதிகளின் பொய் கூற்று அம்பலம்

பூங்கோதை 2020-05-06 21:06:00
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அண்மையில், அமெரிக்க நியூ ஜெர்சி மாநிலத்தின் பெல்லிவில்லி நகராட்சியின் தலைவர் மைக்கேல் மெல்ஹாம் கூறுகையில், 2019ஆம் ஆண்டு நவம்பரின் தனக்கு கரோனா வைரஸ் தொற்று இருந்திருக்கலாம் என கருதுகிறேன் என்றார். மேலும், பரிசோதனையின்படி, இவ்வைரஸுக்கான தடுப்பாற்றல் உடலில் இருந்தது. அவரது கூற்று, சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்க அரசியல்வாதிகளின் பொய் கூற்றுகளை இது அம்பலப்படுத்தியுள்ளது.

முதலில், அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவல் நிலைமையை அமெரிக்க அரசு தொடர்ச்சியாக மூடிமறைத்து வருகிறது. உண்மையிலே, கடந்த செப்டம்பரில் அமெரிக்காவில் காய்ச்சலால் உயிரிழந்தோரில் சிலர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் ஆவர் என்று அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய இயக்குநர் ராபர்ட் ரெட்ஃபீல்ட் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

இரண்டாவதாக, கரோனா வைரஸால் பாதிக்கப்படோர் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை பற்றிய தகவலை, அமெரிக்கா தெளிவாக வெளியிடவில்லை. அமெரிக்க அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் இவ்வைரஸ் பற்றிய கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு முன், அந்நாட்டின் துணை அரசுத் தலைவர் அலுவலகத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவதாக, அறிவியலாளர் இவ்வைரஸ் பற்றிய தகவல்களைத் தெரிவிப்பதற்கு அமெரிக்கா தடை செய்துள்ளது.

நான்காவதாக, உலகத்தில் மிகப் பெரிய வளர்ந்த நாடான அமெரிக்காவில், கரோனா வைரஸ் பரவல் தடுப்பு பொருட்களின் கொள்வனவு மற்றும் விநியோகம் குழப்பமாக இருக்கின்றன.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பணி அமெரிக்க அரசால் எப்படி தாமதப்படுத்தப்பட்டது என்பது தெளிவாக வெளியாகி உள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்