சீனாவில் வறுமை ஒழிப்பிற்கான வழிமுறைகளும் சிறப்பான நடவடிக்கைகளும்!

மதியழகன் 2020-05-12 18:58:00
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முறையே சீனாவின் செஜியாங், ஷான்ஷி, சான்ஷி ஆகிய மாநிலங்களின் கிராமங்களுக்கு நேரில் சென்று களஆய்வு மேற்கொண்டார்.

சீனாவின் செஜியாங் மாநிலத்தின் யூ கிராமத்தில், “பசுமையான மலை மற்றும் தூய்மையான தண்ணீர்” என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வருவதுடன், கிராம சுற்றுலா தொழில் சீராக வளர்ந்து வருகிறது.

சீனாவின் ஷான்ஷி மாநிலத்தின் ஜின்மி கிராத்தில், கருப்பு பூஞ்சை நிலங்களில் தனிச்சிறப்பான வகையில் விவசாயம் செய்வதன் மூலம் உள்ளூர் கிராமவாசிகளின் வருமானம் அதிகரித்துள்ளதோடு, வாழ்க்கைத் தரம் மேம்பட்டு வருகிறது.

மேலும், ஷான்ஷி மாநிலத்தின் ஜியாங்ஜியாபிங் கிராமத்தில், நவீனமான தேயிலை தோட்டச் செயல்முறையின் பகுதியில், தேயிலை வளர்ப்பு மற்றும் உற்பத்தியின் மூலம், உள்ளூர் மக்கள் வறுமையில் இருந்து விடுபட்டு வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

மே 11ஆம் நாள் திங்கள்கிழமை, சான்ஷி மாநிலத்தின் டாட்டோங் மாவட்டத்தின் யுன்சோ நகரிலுள்ள இயற்கைவிவசாயபண்ணை ஒன்றிற்கு சென்று, ஷிச்சின்பிங் உள்ளூர் வறுமை ஒழிப்புப் பணிகளை அறிந்து கொண்டார்.

அங்கு பயிரிடப்பட்டு வரும் மஞ்சள் அல்லி வகையான பயிர், உள்ளூர் மக்கள் வருமானம் அதிகரிக்க முக்கிய காரணமாகும்.

2020ஆம் ஆண்டு வறுமை ஒழிப்பு இலக்கை நனவாக்கி, குறிப்பிட்ட வசதியான சமூகத்தை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது. தற்போது, சீனாவின் பல்வேறு இடங்களில் வறுமை நிவாரணம் மற்றும் வறுமை ஒழிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதனிடையில், வெவ்வேறு கிராமங்களில், வெவ்வேறு நிலைமையின்படி, வெவ்வேறு வறுமை ஒழிப்புத் திட்டங்கள் நடைமுறையில் கொண்டு வரப்பட்டுள்ளன. தனிச்சிறப்பு வாய்ந்த பயிர்களை வளர்ப்பது, தனிச்சிறப்புமிக்க தொழில் நடத்துவது, சுற்றுலா தொழில், இணைய வர்த்தகம், ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு பயிரையும் வளர்ப்பது உள்ளிட்ட வறுமை ஒழிப்பிற்கான பல்வகை விதமான நடவடிக்கைகள் சீனாவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கடந்த மாதம் ஷான்ஷி மாநிலத்தில் ஆய்வு பயணம் மேற்கொண்ட போது, இவ்வாண்டு வறுமை ஒழிப்பு இலக்கை நனவாக்குவதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன். அதற்குப் பிறகு இந்த பணிச் சோதனை தொடர முடியுமா, இது நீண்டகால இயக்கமுறை இருக்குமா போன்ற பிரச்சினைகளில் நான் மேலதிக கவனம் செலுத்துகின்றேன் என்று குறிப்பிட்டார்.

தற்போது சீனாவில், வெவ்வேறு இடங்களில் தனிச்சிறப்பு வாய்ந்த தொழில்களை வளர்த்து, துல்லியமான முறையில் வறுமை ஒழிப்பை நனவாக்குவது என்பது, மேற்கூறிய பிரச்சினைகளுக்கு தீர்வு முறையாகும்.

வறுமை ஒழிப்பு மட்டுமல்லால், அது தனிச்சிறப்பு வாய்ந்த தொழில்களை வளர்ப்பது, கிராமங்கள் புத்துயிர் பெறுவதற்கும் பயனளிக்கும் என்று நம்புகின்றோம்.

வறுமை ஒழிப்பை நிறைவேற்றி, ஒவ்வொருவரையும் குறிப்பிட்ட வசதியான சமூகத்தில் சேர்க்க சீனா முயற்சி எடுத்து வருகிறது. இந்த இலக்குகளை நனவாக்க முடியும் என்பது பெருமளவில் விவசாயிகளின் வாழ்க்கைத் தர மேம்பாட்டைச் சார்திருக்கிறது. கிராமப்புறங்களில் விவசாயிகள், நன்மை பெற்று, மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ்ந்து வருவது என்பது இறுதியான இலக்கு ஆகும்.

சீனாவின் அதியுயர் தலைவர், பலமுறை கிராமப்புறங்களில் நேரில் சென்று களஆய்வு செய்து, வறுமை ஒழிப்புப் பணியில் மிகுந்த கவனம் செலுத்துவது, இந்த இலக்குகளை நனவாக்குவதற்கு மனவுறுதியை வெளிக்காட்டுகிறது. குறிப்பாக, சான்ஷி மாநிலப் பயணத்தில், ஷிச்சின்பிங் முதலில் வறுமை ஒழிப்புப் பணியை ஆய்வு செய்ததில் இருந்து, வறுமை ஒழிப்பு பணிக்கு முடுக்கி விடப்பட்டுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில், சீனாவில் 70கோடிக்கும் அதிகமானோர் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர். இந்த சாதனை, மனித வரலாற்றில் மிக விரைவாகவும் மிக பெருமளவிலும் வறுமை ஒழிப்பு ஆனது.

2020ஆம் ஆண்டுக்குள் சீனாவின் வறுமை ஒழிப்பு இலக்கு நிறைவேறினால், ஐ.நா.வின் 2030ஆம் ஆண்டு நிலையான வளர்ச்சி நிகழ்ச்சி நிரலிலுள்ள வறுமை ஒழிப்பு இலக்கை விட சீனா 10 ஆண்டுகளுக்கு முன்கூட்டியே அதை நனவாக்கும். சீனா உலகின் வறுமை ஒழிப்புப் பணியில் முக்கிய பங்களிப்பை வழங்கும் அதேவேளை, வறுமைப் பிரச்சினையை எதிர்கொள்ளும் பிற நாடுகளுக்கும் முன்மாதிரியை உருவாக்கும். மேலும், துல்லியமான முறையில் வறுமை ஒழிப்புகளின் அனுபவங்களை சீனா பிற நாடுகளுக்கு கூட்டாக பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்