உலகளவில் செல்வாக்கு வாய்ந்த சீன-ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவு உருவாக்கப்படும்

சரஸ்வதி 2020-06-23 18:37:02
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், 22ஆம் நாளிரவு, காணொலியின் மூலம், ஐரோப்பிய பேரவைத் தலைவர் சார்லஸ் மைகல், ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் வர்சுலா வான் தேர் லெயன் ஆகியோருடன் உரையாடினார். உலகின் அமைதியையும் நிதானத்தையும் பேணிக்காக்கும் முக்கிய ஆற்றலாக சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் மாற வேண்டும். உலகின் வளர்ச்சி மற்றும் செழுமையை முன்னேற்றும் இரண்டு பெரிய சந்தைகளாகவும், பல தரப்புவாதத்தில் ஊன்றி நின்று, உலக மேலாண்மையை மேம்படுத்தும் இரண்டு நாகரிகங்களாகவும் மாற இரு தரப்பும் பாடுபடும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.

உலகில் ஏற்படும் கடும் அபாயத்தைச் சமாளிக்க உண்மைகளுக்கு ஏற்ப, சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒன்றுக்கு ஒன்று ஆதரவளிக்க வேண்டும்.

நெடுநோக்கு கண்ணோட்டம் இருந்தால், நீண்டகால வளர்ச்சியை நனவாக்கலாம். கரோனா வைரஸ் பரவி வரும் இந்நிலையில் ஒன்றுக்கு ஒன்று நலன் பயக்கும் வகையில் கூட்டு வெற்றி பெற இரு தரப்பும் முன்கண்டிராத அளவில் ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதை, உணர்ந்துகொள்ளலாம். இதற்கு, இரு தரப்புகளுக்கிடையில் உயர் நிலை பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்புகளைத் தேடலாம். சீன-ஐரோப்பிய ஒன்றியத்தின் பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவை புதிய காலக்கட்டத்திற்கு முன்னேற்றுவது, பல தரப்புவாதத்தைப் பேணிக்காத்து, உலகப் பொருளாதாரத்தின் மீட்சியை விரைவுபடுத்துவதற்குத் துணை புரியும். மேலும், இரு தரப்பு மற்றும் உலகத்திற்கு புதிய வளர்ச்சி வாய்ப்புகளையும் இது கொண்டு வரும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்