எல்லைப் பதற்றத்தை தணிப்பதில் ஆக்கப்பூர்வ மாற்றம்

மதியழகன் 2020-06-23 20:05:02
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைகள் நேற்று 22ஆம் தேதி எல்லைப் பகுதியில் 2-வது முறையாக தளபதி நிலைப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இப்பேச்சுவார்த்தையின் போது, எல்லைப் பதற்றத்தைக் குறைக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன.

பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு மூலமாக, கருத்து வேறுபாடுகளைக் களைந்து, பதற்றத்தை தணிக்க பொதுவான விருப்பத்தை இப்பேச்சுவார்த்தை காட்டுகிறது.

இதையடுத்து, எல்லைப் பிரச்சினையில் ஆக்கப்பூர்வமான மாற்றம்  காணப்பட்டுள்ளது. இரு நாடுகள்,  தத்தமது மக்களின் அடிப்படை நலன்களைக் கருத்தில் கொண்டு பொறுப்புணர்வுடன் செயல்பட முடியும் என நாம் நம்புகின்றோம். எல்லைப் பகுதியில் இயல்பான நிலை விரைவாக திரும்புவதையும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

கல்வான் பள்ளத்தாக்கில் சீன-இந்திய ராணுவ வீர்ர்களிடையே மோதல் சம்பவம் நிகழ்ந்த பிறகு, இந்தியாவின் செய்தி ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. எல்லைப் பதற்றம் காணப்பட்டுள்ள நிலையில்,  இந்த செய்திகள்  மக்களின் உணர்ச்சியை மேலும் தூண்டியுள்ளன. இதன் விளைவாக, இரு நாட்டு நட்புறவு பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது, எல்லைப் பிரச்சினையில் ஆக்கப்பூர்வமான மாற்றம் ஏற்படுகின்ற தருணத்தில்,  இந்திய செய்தி ஊடகங்கள்,  இரு நாட்டு நட்புறவை வளர்ப்பதிலும், இரு நாட்டு மக்களிடையே புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையை அதிகரிப்பதிலும் பங்காற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்