அமெரிக்காவின் புகழைக் கெடுத்து வரும் பாம்பியோ

2020-06-24 20:17:47
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் பல நுற்றாண்டுகளாக சேவை மற்றும் தியாகத்தின் அடிப்படையில் பெற்றுள்ள நற்பெயர்களை மைக் பாம்பியோ சீரழித்துள்ளதாக, நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் இணையதளத்தில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவைட்-19 நோய் தொற்றுக்கு எதிரான போராட்டத்திலும், இனவெறிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திலும், சமீப காலமாக வெளியுறவு அமைச்சரான பாம்பியோவின் செயல்பாடுகளால், அமெரிக்காவின் வெளியுறவுத் துறை, தடுமாற்றமான நிலையில் சிக்கியுள்ளது.

உள்நாட்டில், இனவெறி பாகுபாடுப் பிரச்சினை குறித்து, பாம்பிய நேர்மையான பதில் அளிக்கவில்லை. கருப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்டு மரணம் குறித்து அவர் எந்த கருத்தும் கூறவில்லை. ஆனால்,  உள்நாட்டிலுள்ள முரண்பாடு மற்றும் அரசியல் நெருக்கடியில் கவனம் செலுத்தாமல், சீனா மீது அவதூறு பரப்புவதில் அவர் மிகவும் ஆர்வமாக இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பாம்பியோவைப் பொறுத்த வரை சீனாவை குறைக்கூறுவது அவரின் முதன்மைத் தொழில் ஆகும் என்று பல செய்தி ஊடகங்கள் விமர்சித்துள்ளன.

உள்நாட்டு பிரச்சினையை திறமையுடன் கையாளாமல், வெளிநாடுகளில் குழப்பம் ஏற்படுத்த முயலும் விதமாக, அவர் செயல்படுவது அவரின் அறியாமையினால் அல்ல.  உண்மையில், சுய அரசியல் லாபத்திற்காக தான், அவர் வேண்டுமென்றே இவ்வாறு செயல்பட்டு வருகிறார். சொந்த நலனுக்காக, அமெரிக்காவின் தேசிய நலன்களை அவர்  கெடுத்து வருகின்றார்.

கொவைட்-19 நோய் தொற்றை எதிர்த்து போராடுவதில் கவனம் செலுத்தாமல், பாம்பியோ அரசியல் துறைகளில் தனது நலன்களை பெறும் வகையில் மதிப்புள்ள நேரங்களைக் வீணடித்து, சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் புகழ்களையும் இடைவிடாமல் கெடுத்து வருகிறார்.  இவ்வாறு தொடர்ச்சியாக செய்தால்,  அவர் வரலாற்றில் மிக மோசமான வெளியுறவு அமைச்சர் என்ற பெயரைப் பெறுவார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்