போலியான அரசியல்வாதி:பாம்பியோ

வான்மதி 2020-06-25 19:39:00
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ, நற்செய்தி அறிவிப்பு சார்ந்த பக்தியுள்ள கிறிஸ்துவராக இருக்க வேண்டும் என அடிக்கடி கூறியிருக்கிறார். மேலோட்டமாக பார்த்தால் அவர் இத்தகைய ஒருவராவார்.

நற்செய்சி மற்றும் உண்மையை நாடி வரும் கிறிஸ்துவர் பின்பற்றும் விதிமுறையில், நேர்மை என்பது அடிப்படையான ஒன்று. பொய்கூற்றை முற்றிலும் கைவிட்டு, மற்றவரிடம் உண்மையை மட்டுமே சொல்ல வேண்டும்.

ஆனால் கொவைட்-19 நோய்த் தொற்று பரவிய பிறகு, அமெரிக்க அரசியல்வாதிகள் சிலர் தங்களது சுயநலத்தைக் கருத்தில் கொண்டு, பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் பொது மக்களின் உயிர் பாதுகாப்பைப் பொருப்படுத்தாமல், திரும்பத் திரும்ப தவறான முடிவுகளை எடுத்து நோய்த் தொற்று தீவிரமாக பரவ காரணமாகியுள்ளனர்.

அவர்களில் ஒருவரான பாம்பியோ, தன் தவறுகளை மீளாய்வு செய்யாமலும், நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளாமலும், சொந்த பொறுப்பைத் தட்டிகழிக்கும் வகையில், சீனா மீது அவதூறு பரப்பி வருகிறார். குறிப்பாக நோய்த் தொற்று நிலைமையை சீனா மூடிமறைத்து உலகத்தை ஏமாற்றுவதாக வதந்திகளைப் பரப்பி வருகிறார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்