அனைத்து மக்களுக்கும் குறிப்பிட்ட வசதியான சமூகத்தில் வாழும் உரிமையை வழங்கும் சீனா!

மதியழகன் 2020-06-26 20:43:53
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் பல ஆயிரம் ஆண்டுக்கால வரலாற்றில், போதுமான உணவு மற்றும் ஆடைகள் நிறைந்த வாழ்க்கையை வாழ்வது என்பது சீனத் தேச மக்களின்  அடிப்படியான விருப்பமாகும்.

சீன தேசத்தில் ஆயிரம் ஆண்டுகளாக நிலவி வந்த வறுமை பிரச்சினை இவ்வாண்டு தீர்க்கப்படும்.  இந்த சாதனை, சீனா மட்டுமல்லாமல் உலகிற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 2020ஆம் ஆண்டு தற்போதைய வரையறையின்படி, கிராமப்புறங்களில் வறிய மக்கள் அனைவரும் வறிய நிலையில் இருந்து விடுவிக்கப்படுவர் என்ற இலக்கை நனவாக்க வேண்டும் என்று சீனா வாக்குறுதி அளித்துள்ளது.

இந்நிலையில்,  உணவு பொருட்கள் மற்றும் ஆடைகள், கட்டாயக் கல்வி, அடிப்படை மருத்துவச் சிகிச்சை, வீட்டு வசதி ஆகிய அடிப்படைக் காப்புறுதி மக்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், இவ்வாண்டு ஷான்சி, சான்சி, நிங்சியா ஆகியற்றில் ஆய்வுப் பணி மேற்கொண்டபோது, உள்ளூரில் வறுமை ஒழிப்புப் பணியில் அதிக கவனம் செலுத்தியுள்ளார். இதுவே, சீனா திட்டப்படி இந்த இலக்கை நனவாக்குவதன் நம்பிக்கையையும் மனவுறுதியையும் வெளிக்காட்டுகிறது.

வறுமை ஒழிப்பு மற்றும் வசதியான வாழ்க்கையை உருவாக்குவது, வறிய பிரதேசங்களுக்குச் சொந்த விடயம் மட்டுமல்லாமல், முழு சமூகமும் இதில் ஈடுபடுமாறு ஊக்கமளிக்கப்படுகிறது.

கடந்த ஜுன் 8ஆம் தேதி, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், நிங்சியா பிரதேசத்திலுள்ள குடியிருப்பு ஒன்றை ஆய்வு செய்தபோது, பல்வேறு தேசிய இனங்கள், சீனத் தேசக் குடும்பத்தில் ஒன்றாகும். எனவே, வறுமை ஒழிப்பு, குறிப்பிட்ட வசதியான சமூக உருவாக்கம், நவீனமயமாக்கம் ஆகிய முன்னேற்றத்தில் எந்தொரு தேசிய இனமும் இடம்பெற வேண்டும் என்று தெரிவித்தார்.

பல்வேறு தேசிய இனங்கள் அனைத்தும் இணைந்து முன்னேறி, குறிப்பிட்ட வசதியான சமூகத்தில் நுழைவது,  சீனத் தேசத்தின் சிறந்த பாரம்பரியமாகும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்