அமெரிக்காவை அபாயமான நிலைக்குக் கொண்டுச் சென்ற அந்நாட்டின் அரசியல்வாதிகள்

பூங்கோதை 2020-07-29 21:05:03
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கடந்த சில நாட்களாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, அமெரிக்க கூட்டாட்சி புலனாய்வுப் பணியகத்தின் தலைவர் கிறிஸ்டோபர் வ்ரே உள்ளிட்ட அரசியல்வாதிகள் சீனாவுக்கு எதிராக ஆற்றிய சொற்பொழிவில், அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமையா சீனா திருடியுள்ளது என்று தீய நோக்கத்துடன் குற்றம் சாட்டினர். கூடவே, ஹூஸ்டனிலுள்ள சீனத் துணை நிலை தூதரகத்தை அமெரிக்கா அண்மையில் மூடியது. சீன-அமெரிக்க உறவை இது கடுமையாகச் சீர்குலைத்துள்ளது.

ஆனால், மைக் பாம்பியோ போன்ற அமெரிக்க அரசியல்வாதிகள் தான், உலகளவில் உளவு நடவடிக்கைகளை நடத்தி, பிற நாடுகளின் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியைத் தடுத்து வருகின்றனர். சீனாவின் மீதான அவர்களின் அவதூறுகளுக்கு சான்று எதுவும் இல்லை. இது ஆய்வாளர்களின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

தற்போது, சீன-அமெரிக்க உறவு அறைகூவல் மிக்க பின்னணியில் உள்ளது. இந்நிலையில், “சீன ஒற்றர்கள்” போன்ற பொய் கூற்றுகளை அமெரிக்க அரசியல்வாதிகள் பரப்பி, உள்நாட்டிலுள்ள முரண்பாடுகளை மடைமாற்றம் செய்வதோடு, அமெரிக்கச் சமூகத்தை அச்சுறுத்தியும் வருகின்றனர்.

சீன அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி ஆற்றல் உயர்ந்து வருவதுடன், அமெரிக்க அரசியல்வாதிகளிடையே ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. இத்துறையில் அமெரிக்காவின் ஆதிக்கத்தைப் பேணிக்காக்கும் வகையில், அவர்கள் சீனாவின் தொழில் நிறுவனங்களின் மீது தடை நடவடிக்கை மேற்கொண்டு, சீனாவின் அறிவியல் தொழில் நுட்பத்தின் மீது போர் தொடுத்து வருகின்றனர்.

திறப்பு, ஒத்துழைப்பு, பொறுமை ஆகியவை, மனித நாகரிக முன்னேற்றத்தின் அடித்தளமாகவும், அமெரிக்கா வெற்றி பெற்றதற்கான காரணமாகவும் திகழ்கின்றன என்று வரலாற்றை மீளய்வு செய்யும் போது தெரிந்து கொள்ளலாம். ஆனால், மைக் பாம்பியோ போன்ற அமெரிக்க அரசியல்வாதிகள் அமெரிக்காவை, அபாயமான நிலைக்குக் கொண்டுச் சென்று வருகின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்