அமெரிக்கத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியைச் சீர்க்குலைக்கும் மைக் பாம்பியோ

பூங்கோதை 2020-07-30 20:39:04
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, அண்மையில் கலிபோர்னியா மாநிலத்தின் நிக்சன் நூலகத்தில் சொற்பொழிவு ஆற்றிய போது, அமெரிக்கத் தொழில் நிறுவனங்களை அடக்கும் செயலை சீனா செய்தது என்று தீய நோக்கத்துடன் பழி கூறினார். உண்மையிலே, சுதந்திரமான போட்டி என்று கூறி வருகின்ற மைக் பாம்பியோ போன்ற அமெரிக்க அரசியல்வாதிகள் தான், அமெரிக்கத் தொழில் நிறுவனங்களின் வணிகக் கொள்கைகளில் தலையிட்டு, அவற்றின் சுதந்திரமான வளர்ச்சியைத் தடுத்தி வருகின்றனர். அவர்கள் சந்தையின் பொருளாதார விதிமுறைகளை மீறி, சீனாவுடன் பொருளாதாரத் தொடர்பை அமெரிக்கா துண்டிப்பதைத் தூண்டி வருகின்றனர்.

அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள் சீனாவுடன் வணிகம் செய்ய விரும்புகின்றன. காரணம் என்ன? சீன-அமெரிக்கத் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 40க்கும் மேலான ஆண்டுகளாக, ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறுவது, இரு தரப்புப் பொருளாதார மற்றும் வர்த்தகத் தொடர்பின் சாராம்சமாகும். கடந்த சில ஆண்டுகளாக, சீனாவில் அமெரிக்க முதலீட்டுத் தொழில் நிறுவனங்களின் ஆண்டு விற்பனை வருமானம் 70 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டி வருகிறது. அத்துடன், குறைவான விலை கொண்ட தரமிக்க சீனப் பொருட்கள் அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அமெரிக்கத் தொழில் நிறுவனங்களும், அமெரிக்கப் பொது மக்களும் சீனச் சந்தையிலிருந்து நன்மை பெற்று வருகின்றனர். மைக் பாம்பியோவின் கூற்று முற்றிலும் தவறாக உள்ளது.

தற்போது, கரோனா வைரஸின் பாதிப்பால், அதிகமான அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள் திவால் நிலையை அறிவித்துள்ளன. இந்தப் பின்னணியில், அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள் சீனா உள்ளிட்ட மேலும் பெரிய சந்தைகளில் வளர்ச்சி வாய்ப்புகளைத் தேட வேண்டும் என்பதில் ஐயம் இல்லை. ஆனால், மைக் பாம்பியோ போன்ற அமெரிக்க அரசியல்வாதிகள் இதைத் தடுத்து வருகின்றனர். அவர்கள் தங்களது சொந்த அரசியல் நலன்களில் மட்டுமே கவனம் செலுத்துவது தெளிவாகத் தெரிகிறது. இப்படிச் செய்தால், அமெரிக்கத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மேலும் சீர்க்குலையும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்