சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சீனாவின் பங்கு

2020-09-01 21:44:59
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனப் பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பை அலட்சியம் செய்யும் அடிப்படையில் இடப்பட்டுள்ளது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ அண்மையில் சமூக ஊடகத்தில் அவதூறு கூறினார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் பேசுகையில் போம்பியோ அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரச்சினையில் முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

அமெரிக்கா பாரிஸ் உடன்படிக்கையிலிருந்து விலகியது, உலகில் வெப்ப அறை வாயு வெளியேற்றப் போக்கினைக் கடுமையாக தடுத்துள்ளது. சர்வதேச சமூகத்தில் அமெரிக்காவின் புகழ் இழந்துள்ளது.

தூய்மையான வளர்ச்சி, சீனப் பொருளாதாரத்தின் உயர் தர வளர்ச்சியை நனவாக்குவதற்குத் திறவுகோளாகும். கடந்த சில ஆண்டுகளில், சீனாவில் முக்கிய மாசுப் பொருட்களின் வெளியேற்ற அளவு குறைந்து வருகிறது. உயிரின வாழ்க்கை சூழல் தெள்ளத்தெளிவாக மேம்பட்டுள்ளது. அதோடு, ஐ.நா காலநிலை மாற்ற கட்டுக்கோப்பு பொது ஒப்பந்தம், பாரிஸ் உடன்படிக்கை உள்ளிட்ட உடன்படிக்கைகளை சீனா சீராக செயல்படுத்தி, உலகில் தொடரவல்ல எரியாற்றலுக்கு மிக அதிகமாக முதலீடு செய்யும் நாடாக இருந்து வருகிறது. மேலும் சீனா உலக சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டுக்கு ஆக்கப்பூர்வ பங்காற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்