உலகப் பொருளாதாரத்துக்குச் சேவை வர்த்தக மேம்பாடு அவசியம்: ஷிச்சின்பிங்

சிவகாமி 2020-09-05 16:25:28
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2020ஆம் ஆண்டு சீனச் சர்வதேச வர்த்தகப் பொருட்காட்சியின் உலகச் சேவை வர்த்தக உச்சிமாநாடு செப்டம்பர் 4ஆம் நாள் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் காணொலி மூலம் உரை நிகழ்த்தினார். 148 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 18 ஆயிரம் தொழில் நிறுவனங்களும் 1 இலட்சம் மக்களும் இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள பதிவு செய்துள்ளனர்.

தற்போதைய உலகப் பொருளாதாரம் எதிர்கொண்டுள்ள அறைகூவல்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து ஷி ச்சின்பிங் விரிவாக கருத்துக்களைத் தெரிவித்தார். எதிர்காலத்தை நோக்கும் போது, சேவைத் துறையின் திறப்பு ஒத்துழைப்பு, வளர்ச்சியை முன்னேற்றும் முக்கிய ஆற்றலாக நாளுக்கு நாள் மாறி வருகிறது என்று ஷிச்சின்பிங் தனது உரையில் தெரிவித்தார்.

புதிய ரக கரோனா வைரஸ் பரவி வரும் இச்சூழலில், சேவைத் துறையின் திறப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து, ஷிச்சின்பிங் மூன்று முன்மொழிவுகளை முன்வைத்தார். பல்வேறு நாடுகள் ஒத்துழைப்புக்குத் திறப்பு மற்றும் அனைத்தையும் உள்ளடக்கும் தன்மை வாய்ந்த சூழ்நிலையை உருவாக்குவது, புத்தாக்கத்தின் தலைமையிலான ஒத்துழைப்பு ஆற்றலைச் செயலாக்குவது, ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறும் நிலைமையை ஏற்படுத்துவது ஆகியவை இந்த மூன்று முன்மொழிவுகளாகும். சேவைத் துறையின் திறப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல நடவடிக்கைகளைச் சீனா முன்னேற்றியுள்ளது. உலகக் கூட்டு திறப்பை முன்னேற்றியுள்ள முக்கிய நாடாகவும் பல தரப்பு வர்த்தக அமைப்பு முறைமைக்கு உறுதியாக ஆதரவு அளிக்கும் நாடாகவும் சீனா மாறியுள்ளது என்பதை இது உலகிற்கு காட்டுகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்