3 மாதங்கள் 3 கண்கண்காட்சிகளில் சீனாவின் வாய்ப்பு பகிர்வு!

மதியழகன் 2020-09-12 21:22:38
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

படம்-VCG

படம்-VCG

2020ஆம் ஆண்டு சேவை வர்த்தகத்துக்கான சீனச் சர்வதேசக் கண்காட்சி கடந்த 9ஆம் நாள் பெய்ஜிங்கில் நிறைவுப்பெற்றது. வரும் அக்டோபர் திங்களில், 128ஆவது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கண்காட்சி இணைய வழியாக நடைபெறவுள்ளது. மேலும், 3ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிக் கண்காட்சி நவம்பர் திங்கள் ஷாங்காயில் நடைபெறவுள்ளது.

படம்-VCG

படம்-VCG

இந்த மூன்று கண்காட்சிகளில் பெரிய வேறுபாடுகள் காணப்பட்டு வருகின்றன. சீனாவில் பெரிய அளவில் நடைபெறும் இந்த கண்காட்சிகள், சீனாவின் வெளிநாட்டு திறப்பு முன்னேற்றப் போக்கில் முக்கிய அடையாளச் சின்னமாக கருதப்படும். இந்த கண்காட்சிகள், வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் மற்றும் உலக நாடுளுக்கு நிறைய புதிய வாய்ப்புகளை வழங்குகின்றன. சீனா இத்தகைய வெளிநாட்டு திறப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு, உலகத்துடன் வளர்ச்சி வாய்ப்புகளை பகிர்ந்துக் கொள்வதோடு, குறிப்பாக, கரோனா தொற்று நோய் பாதிப்புக்குள் உள்ள உலகப் பொருளாதாரத்தின் மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு உந்து சக்தியை ஊட்டுவதாகவும் அமையும்.

சமீபத்தில் பெய்ஜிங்கில் நடைபெற்ற சேவை வர்த்தகத்துக்கான சர்வதேச கண்காட்சியின் போது, நாட்டின் சேவை துறைத் திறப்பை விரிவாக்கும் பன்னோக்க முன்மாதிரி மண்டலத்தை பெய்ஜிங் உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளது. இதில், சேவை திறப்பு, எண்முறைப் பொருளாதாரம் ஆகியவற்றை முக்கிய அடையாளமாக கொண்டுள்ள தடையில்லா வர்த்தக மண்டலம் கட்டி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, சேவை துறைத் திறப்பை விரிவாக்குவது தொடர்பான முக்கிய நடவடிக்கைகளையும் கருத்துக்களையும் சீனா அறிவித்துள்ளது.

இதில், சீனா உண்மையான நடவடிக்கை மூலம் வெளிநாட்டுத் திறப்பை விரிவாக்கும் உறுதியான நம்பிக்கையை வெளிக்காட்டுகிறது. இதுவே, சீனாவின் புதிய பொருளாதார கொள்கையில் திறப்பு நிலைப்பாடு குறித்து வெளி உலகத்தில் எழுந்த சந்தேகத்துக்கு பதில் ஆகும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்