உலகின் வறுமை நிவாரணத்துக்கு பங்களிக்கும் சீனா

வான்மதி 2020-10-06 16:35:40
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவில் உயர்வேக இருப்புப் பாதையின் நீளம் 36 ஆயிரம் கிலோமீட்டர். இது, உலகளவில் மூன்றில் 2 பகுதிக்கு மேலாகும். இது, சீனாவின் வளர்ச்சியை வெளிக்காட்டுவதோடு, பல்வேறு பகுதிகள் வறுமையிலிருந்து விடுபடவும் துணைபுரிந்துள்ளது. எடுத்துக்காட்டாக, ஆன்ஹுய் மாநிலத்தின் ஜின்சாய் மாவட்டம் உயர்வேக இருப்புப்பாதை சார்ந்து சுற்றுலா துறையை வளர்த்தியதன் மூலம் கடந்த ஏப்ரில் வறுமை மாவட்டங்களின் பட்டியலிலிருந்து விலகியது.

மிகப் பெரிய வளரும் நாடான சீனா, வறுமை நிவாரணப் பணியில் படைத்த அதிசயத்தக்க சாதனைகள், உலகின் வறுமை நிவாரணம் என்ற லட்சியத்துக்கு அளிக்கும் மாபெரும் பங்களிப்பாகும். இத்துறையில் சீனாவின் பங்கு 70 விழுக்காட்டுக்கும் மேல் என்று உலக வங்கியின் புள்ளிவிவரம் காட்டுகிறது. 2012 முதல் 2019 வரை, சீனாவில் மேலும் 9 கோடிக்கும் அதிகமான வறிய மக்கள் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். வறுமை ஏற்படும் விகிதம் 10.2 விழுக்காட்டிலிருந்து 0.6 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இது குறித்து ஐ.நா. தலைமைச் செயலாளர் குட்ரேஸ் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் சீனா உலகின் வறுமை நிவாரணப் பணிக்கு மிகப் பெரிய பங்காற்றியுள்ள நாடாகும் என்று தெரிவித்தார்.

கோவிட்-19 தொற்று நோய் உலகின் வறுமை நிவாரணப் பணிக்குப் பெரும் சவாலாகும். இவ்வாண்டில் 7 கோடியே 10 லட்சம் பேர் மீண்டும் தீவிர வறுமை நிலைக்குத் திரும்புவர் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், அண்மையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றில், சீனாவின் வறுமை நிவாரண அனுபவங்கள் கற்றுக் கொள்ளத்தக்கவை என்று பல்வேறு தரப்புகள் கருத்து தெரிவித்தன.

வளர்ச்சியானது, வறுமைப் பிரச்சினையை சீனா தீர்ப்பதற்கான திறவுகோலாகும். அது மட்டுமல்ல, பொறுப்புணர்வு மிக்க பெரிய நாடான சீனா, தனது வறுமை நிவாரணப் பணியை முன்னேற்றும் அதேவேளை பல்வேறு வழிமுறைகளின் மூலம் இதர நாடுகள் வறுமையிலிருந்து விலகுவதற்கும் உதவியளித்து வருகிறது. தற்போதைய இக்கட்டான தருணத்தில், சீனா தன்னைத் தானே வளர்ச்சியுறச் செய்வதுடன், சர்வதேச ஒத்துழைப்பில் பங்கெடுத்து உலகின் வறுமை நிவாரணப் பணிக்கும் தொடர்ந்து பங்காற்றி, சொந்த வளர்ச்சிக் கனியை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்