அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல்வாதிகள் ஆதரித்து வருகின்ற ஒரு தலைப்பட்ச தடை

சிவகாமி 2020-10-08 19:08:33
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அண்மையில், நடைபெற்ற 75ஆவது ஐ.நா. பொது பேரவையின் 3ஆவது ஆணையக் கூட்டத்தில், ஏறக்குறைய 70 நாடுகள், சீனாவுக்கு ஆதரவு அளித்துள்ளன. இதனால், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள், மனித உரிமைகள் என்ற போர்வையில் சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடும் சூழ்ச்சி மீண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஐ.நாவில் பலதரப்புவாதம், ஒருதரப்புவாதத்தை மீண்டும் ஒருமுறை தோற்கடித்தது.

நீண்டகாலமாக, அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல்வாதிகள், சர்வதேச விவகாரத்தில் இரட்டை வரையறை மேற்கொண்டு, பிற நாடுகளின் மீது ஆயுத ஆற்றல் பயன்பாட்டையும் ஒரு தலைப்பட்ச தடையையும் செயல்படுத்தி வருகின்றனர்.

கரோனா வைரஸ் காலத்தில், அமெரிக்காவின் ஒருதரப்புவாதத்துக்கு உலகளவிலான கோடிக்கணக்கான அப்பாவி மக்கள் பாதிப்புக்குள்ளாக வேண்டியுள்ளது. ஒருதரப்புக் கட்டாய நடவடிக்கைகள், தடை மேற்கொள்ளப்பட்டுள்ள நாடுகளைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கை உரிமைக்கும் சுகாதார உரிமைக்கும் தீங்கு விளைவித்துள்ளன. மகளிர், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. பொது பேரவையின் மனித உரிமைகள் மன்றத்தின் 45ஆவது கூட்டத்தில், சிரியா, ஈராக், போட்ஸ்வானா, ஜிம்பாப்வே முதலிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்