புதிய ரக கரோனா வைரஸ் தடுப்பூசிகளின் செயல்பாட்டுத் திட்டத்தில் இணையும் சீனாவுக்கு பன்னாட்டு ஊடகங்கள் பாராட்டு!

2020-10-11 15:20:16
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

புதிய ரக கரோனா வைரஸ் தடுப்பூசிகளின் செயல்பாட்டுத் திட்டத்தில் இணையும் விதமாக, சீனாவும் தடுப்பூசி மற்றும் நோய் தடுப்புக்கான உலக கூட்டணியும் அக்டோபர் 8ஆம் நாள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இத்திட்டமானது, தடுப்பூசிகளின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியை விரைவுபடுத்துவதாகவும், உலக நாடுகள் அனைத்தும் நியாயமான முறையில் தடுப்பூசி மருந்துகளைப் பெறுவதை உறுதி செய்வதாகவும் அமையும்.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தில், சீனா இத்திட்டத்தில் சேர்ந்துள்ளது என்ற செய்தி வெளியிடப்பட்டதும், வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் இதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றன.

பிரிட்டல் “தி கார்டியன்” நாளிதழ் வெளியிட்ட கட்டுரையில், புதிய ரக கரோனா வைரஸ் தடுப்பூசிகளின் செயல்பாட்டுத் திட்டம், சில நாடுகளில் அனைவருக்கும் கிடைப்பதற்கு மாறாக, அனைத்து நாடுகளின் சிலருக்கு தடுப்பூசி கிடைப்பதற்கு உத்தரவாதம் அளிக்கும். இந்தச் செயல்பாட்டுத் திட்டத்தில் சீனா இணைவதால், பன்னாட்டுச் சமூகம் ஒற்றுமையுடன் தொற்று நோயை எதிர்த்து போராடுவதற்கு மேலதிக நம்பிக்கை ஊட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் கட்டுரையில், சீனாவில் கரோனா தொற்று ஏற்பட்ட பிறகு விரைவாக உள்நாட்டின் வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததோடு, வெளிநாடுகளுக்கு முக கவசம், மருத்துவச் சாதனம் உள்ளிட்ட பொருட்களை நன்கொடையாக அளிக்கவும் சீனா முயற்சி செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவில் சில தடுப்பூசிகள் கடைசிக் கட்டச் சோதனையில் இருக்கும் முக்கிய தருணத்தில், சீனா இத்திட்டத்தில் இணைவதே, முழு உலகத்துடன் ஒற்றுமையுடன் தொற்றை எதிர்க்கும் மனவுறுதியை வெளிக்காட்டுகிறது என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவின் இந்த முடிவு, கரோனா வைரஸ் தடுப்பூசி உலகின் பொதுவானதாகப் பயன்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவதில் முக்கிய காலடியாக விளங்கும் என்று அல் ஜசீரா தொலைக்காட்சி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்