சீனாவின் உயர்நிலை சீர்திருத்தம் மற்றும் திறப்பில் இருந்து மேலதிக வளர்ச்சி நன்மைகளைப் பகிர்ந்து கொள்ளும் உலகம்

மதியழகன் 2020-10-14 20:32:36
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

படம்:VCG

படம்:VCG

உலகளவில், 4000க்கும் அதிகமான சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உள்ளன. இவற்றில் மிகச் சிறந்த மாதிரியாக, ஷென்சென் ஆகும் என்பது ஐயமில்லை என்று பிரிட்டனின் தி இகானமிஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஷென்சென் உள்ளிட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் வெற்றி பெற்றது ஏன்? சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 14ஆம் நாள் புதன்கிழமை ஷென்சென் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் 40ஆவது ஆண்டு நிறைவு மாநாட்டில் உரைநிகழ்த்தியது, சிறப்பு பொருளாதார மண்டலக் கட்டுமானத்தில் 10 அம்ச அனுபவங்களைத் தொகுத்ததோடு, ஷென்செனின் எதிர்கால வளர்ச்சிக்கு 6 அம்ச முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். ஷிச்சின்பிங்கின் உரையில் அதன் வெற்றி பெற்றதன் இரகசியங்களை விளக்கி கூறியதோடு, நவீன சோஷலிச முன்னோடி நகரத்தை உருவாக்குவதற்கு, வழிகாட்டுவதாகவும் உள்ளது. அதேவேளையில், சீர்திருத்தம் மற்றும் திறப்பை ஆழமாக்குவதிலும், உலகத்துடன் வளர்ச்சி நன்மைகளைப் பகிர்ந்து கொள்வதிலும் சீனாவின் மனவுறுதியை உலகிற்கு அந்த உரை வெளிக்காட்டுகிறது.

குறிப்பாக, வெளிநாடுகளின் சில சர்வதேச மாநகரங்களில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக அடைந்து வரும் முன்னேற்றங்களை, ஷென்சென் 40 ஆண்டுகளில் அடைந்துள்ளது. உலக வளர்ச்சி வரலாற்றில் ஓர் அற்புதத்தை அது படைத்தது.

புதிய வளர்ச்சி முறைமையில், மூடப்படும் சூழலில் உள்நாட்டில் வளர்ச்சி அடைவது அல்ல. மாறாக, திறப்பு ரீதியிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இரட்டை சுழற்சி முறையாக அது இருக்கும் என்று ஷிச்சின்பிங் தனது உரையில் வலியுறுத்தினார். அது, புதிய யுகத்தில் திறப்பை விரிவாக்குவதிலும், திறந்த நிலை உலகப் பொருளாதாரத்தை உருவாக்குவதிலும், பொது எதிர்கால சமூகத்தைக் கூட்டாக உருவாக்குவதிலும் சீனாவின் மனவுறுதியை அது மீண்டும் பிரகடனம் செய்தது. அது, சீனாவுக்கும் உலக நாடுகளுக்கும் இடையே பரஸ்பர நலன் தந்து, கூட்டு வெற்றி பெறும் விளைவை மேம்படுத்துவது உறுதி.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்