ஏற்றத்தாழ்வை தாங்கி நிற்கும் சீனப் பொருளாதாரம்

வான்மதி 2019-08-14 19:46:37
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உரிய வரம்புக்குள் தொடர்ந்து இயங்கி வரும் சீனப் பொருளாதாரம் சீரான வளர்ச்சிப் போக்கை நிலைநிறுத்தியுள்ளதை சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் புதன்கிழமை வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன. வர்த்தகச் சர்ச்சையை அமெரிக்கா தீவிரமாக்கி, வெளிப்புற உறுதியற்ற தன்மை அதிகரிக்கும் நிலைமையில் நெகிழ்வுத் தன்மையுடைய சீனப் பொருளாதாரம் தனது சுயநம்பிக்கையை வெளிகாட்டியுள்ளது.

சீனப் பொருளாதாரம் பற்றி ஆய்வு செய்யும் போது குறுகிய கால ஏற்றத்தாழ்வுக்குப் பதிலாக ஒட்டுமொத்த நிலை மற்றும் வளர்ச்சிப் போக்கையே பார்க்க வேண்டும். மேலும், இவ்வாண்டின் முதல் 7 மாதங்களில் சீனப் பொருளாதாரத்தின் கட்டமைப்பு மேம்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளிப்புறச் சூழல் மோசமாகி வரும் நிலையில், ஐஎம்எஃப், உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் நடப்பு மற்றும் அடுத்த ஆண்டிற்கான உலகப் பொருளாதார வளர்ச்சி மீதான மதிப்பீட்டைக் குறைத்துள்ளன. ஆனால் ஆக்கப்பூர்வமான நிதிக் கொள்கையையும் சீரான நாணயக் கொள்கையையும் சீன அரசு மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் சிக்கல் மற்றும் இன்னல்களைச் சமாளிப்பதற்கான போதிய நம்பிக்கை சீனப் பொருளாதாரத்துக்கு உண்டு என தெரிகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்