அமெரிக்காவில் ஃபென்டனில் பொருள் பிரச்சினைக்கு முக்கிய காரணம் சீனா அல்ல!

மதியழகன் 2019-09-03 17:27:05
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இவ்வாண்டு மே திங்கள் முதல் தேதி தொங்கி, ஃபென்டனில் போன்ற மருந்துக் பொருட்களை கட்டுப்பாட்டுப் பட்டியலில் சேர்த்த பிறகு, ஃபென்டனில் போன்ற பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான குற்ற வழக்குகள் எதுவும் சீனாவில் பதிவாகவில்லை என்று சீனத் தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் செப்டம்பர் 3ஆம் நாள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலேயே ஃபென்டனில் போன்ற பொருட்கள் தவறாக பயன்படுத்துவதற்கு முக்கிய காரணமாக சீனா இருப்பதாக, அமெரிக்க அரசு வாரியம் சமீபத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து சீன தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் கூறியதாவது

ஃபென்டனில் போன்ற பொருட்களை சீனா கட்டுப்படுத்தும் சூழ்நிலை மேலும் கண்டிப்பாக இருக்கிறது. ஆனால், அமெரிக்காவில், ஃபென்டனில் போன்ற பொருள் பழக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அமெரிக்காவில் இப்பிரச்சினையை ஏற்படுத்துவதற்கான முக்கிய காரணம் சீனா அல்ல.

அமெரிக்கா வழங்கிய புள்ளிவிவரங்களின்படி, 2018ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2019ஆம் ஆண்டு மார்ச் திங்கள் வரை, அமெரிக்காவில் ஃபென்டனில் போன்ற பொருள் கடத்தல் தொடர்பாக 229 வழக்குகள் உள்ளன. இவற்றில், சீனா 17 வழக்குகளில் மட்டும் சிக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சீனா, அமெரிக்காவில் ஃபென்டனில் பிரச்சினைக்கான முக்கிய காரணம் என்ற அமெரிக்காவின் கூற்றுக்கு ஆதாரம் இல்லை. இந்த கூற்று, உண்மைக்குப் புறம்பானது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்