ஜெர்மன் தலைமையமைச்சரின் சீனப் பயணத்தில் பெறப்பட்டுள்ள சாதனைகள்

2019-09-07 19:25:23
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஜெர்மன் தலைமையமைச்சர் மெர்கல் 7ஆம் நாள் இரண்டு நாட்கள் நீடிக்கும் அதிகாரப்பூர்வ சீனப் பயணத்தை முடித்துக் கொண்டார். அவரது சீனப் பயணத்தில், இரு தரப்பு பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு சாதனைகள் எட்டப்பட்டுள்ளன. அதோடு, அவரின் இப்பயணம், சீன-ஜெர்மன் ஒத்துழைப்பை மேலும் விரிவாக்கும் அதே வேளையில், உலகப் பொருளாதார அதிகரிப்புக்கு புதிய இயக்கு ஆற்றலையும் வழங்கியுள்ளது.

மெர்கல் அம்மையாரின் சீனப் பயணம், இரு தரப்பும் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் முக்கியத்துவத்தையும், சீனாவுடனான ஒத்துழைப்பை ஜெர்மனி விரைவாக வலுப்படுத்தும் விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளது

நெடுநோக்கு தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் மூலம், சீன-ஜெர்மன் உறவு, ஒன்றுக்கொன்று நன்மை பயக்கும் அதே வேளையில், சீன-ஐரோப்பிய உறவுக்கும், உலக வளர்ச்சிக்கும் ஆக்கப்பூர்வ செல்வாக்கு ஏற்படுத்தும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்