சீனாவில் வெளி வர்த்தகத்துக்கான ஏற்பாடுகள்

வான்மதி 2019-10-24 11:38:14
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனத் தலைமை அமைச்சர் லீகெச்சியாங் 23ஆம் நாள் அரசவையின் வழமை கூட்டத்துக்குத் தலைமை தாங்கி, வெளி வர்த்தகத்தை நிதானப்படுத்துவது உள்ளிட்ட பணிகளுக்கு ஏற்பாடு செய்தார்.

இவ்வாண்டில் பல்வேறு இடங்கள் மற்றும் தொடர்புடைய வாரியங்களின் முனைப்புடன், சீனாவின் வெளி வர்த்தகம் சீராக இயங்கி வருகிறது. புதிய சூழ்நிலை மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் நிலையில், வகுக்கப்பட்ட கொள்கைகளைச் செவ்வனே நடைமுறைப்படுத்தும் அதேவேளை, முதலில், ஏற்றுமதி வரிக் குறைப்பு, கடன் காப்பீடு உள்ளிட்ட கொள்கைகளையும் மேலும் முழுமைப்படுத்த வேண்டும். இரண்டாவதாக, உயர்தர தாராள வர்த்தக மண்டலங்களின் தொடரமைப்பை உருவாக்கி, வர்த்தகத்தின் வசதிமயமாக்கத்தை உயர்த்த வேண்டும். மூன்றாவதாக, வெளி வர்த்தகத்துக்கு புதிய தொழில்களை வளர்க்க வேண்டும். நான்காவதாக, உள்நாட்டுக்குத் தேவையான பொருட்களின் இறக்குமதியை ஏற்றுக்கொள்ளும் அளவை அதிகரித்து, 2ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியை சிறந்த முறையில் நடத்த வேண்டும் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்