பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்புக்கு பாகுபாட்டை புறக்கணிக்க வேண்டும்:சீனா கருத்து

வான்மதி 2019-10-25 12:42:59
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க துணை அரசுத் தலைவர் பென்ஸ் 24ஆம் நாள் அறிஞருக்கான வூட்ரொவ் வில்சன் சர்வதேச மையத்தில் சீனா பற்றி வழங்கிய சொற்பொழிவில், பொருளாதாரம், வர்த்தகம், இராணுவம், மனித உரிமைகள், மதம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றன. பழைய கருத்துக்களை மீண்டும் பயன்படுத்தி நிகழ்த்திய உரையில் சீனாவுக்கான அமெரிக்காவின் பங்களிப்பை அவர் தொடர்ந்து மிகைப்படுத்தி, சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் என்ற பெயரில் சீனாவின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதேசமயத்தில் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒத்துழைப்பை ஏற்படுத்தும் வாய்ப்பை அமெரிக்கா தேடி வரும் தகவலையும் அவர் வெளிப்படுத்தினார்.

சீனாவை மீண்டும் கட்டியமைப்பது என்ற கருத்து, ஓராண்டுக்கு முன் பென்ஸ் சீனா பற்றி நிகழ்த்திய உரையின் முக்கிய அம்சமாகும். தற்போது இக்கருத்து மீண்டும் தெரிவிக்கப்பட்டது. இது, சீனா-அமெரிக்கா இடையே ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறக்கூடிய சாராம்சத்தை நிராகரிப்பதாக உள்ளது. சீனாவின் வளர்ச்சியை அமெரிக்காவின் முயற்சியில் சேர்ப்பது என்பதில் வரலாற்று கண்ணோட்டமும் உண்மையும் இல்லை.

அமெரிக்கர்களில் சிலர் தன்னை தானே மனித உரிமை காவலர் என கருதி, சீனாவின் சின்ஜியாங் கொள்கை மீது குற்றஞ்சாட்டி வருகின்றனர். சீனாவின் மனித உரிமை மற்றும் மத கொள்கை மீது பென்ஸ் தனது உரையில் மீண்டும் பழி தூற்றினார். உண்மையிலே, சட்டப்பூர்வ நடவடிக்கைகளின் மூலம் சின்ஜியாங்கின் சமூக அமைதியை பேணிக்காத்து, பயங்கரவாதத்தை ஒடுக்கும் சீன அரசு, சின்ஜியாங் மக்களின் மனித உரிமையை மிக பெருமளவில் பாதுகாத்து வருகிறது.

மேலும், ஹாங்காங் பிரச்சினை பற்றி கூறும் போது வன்முறைக்கு வெளிப்படையாக ஆதரவளிக்கும் பென்ஸ், சீனாவின் உள்விவகாரத்தில் தலையிட்டு, சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச உறவுக்கான அடிப்படை விதியை மிதித்தார்.

ஆனால், சீனாவுடனான தொடர்பை துண்டிக்க அமெரிக்கா விரும்பவில்லை என்றும், இருதரப்பும் முதல்கட்ட வர்த்த்க உடன்படிக்கையை உருவாக்குவதில் அரசுத் தலைவர் டிரம்புக்கு நம்பிக்கை உண்டு என்றும் அவர் தெளிவாக தெரிவித்தார் என்பது கவனிக்கத்தக்கது.

தற்போது சீன-அமெரிக்க வர்த்தகக் கலந்தாய்வு முக்கியமான கட்டத்தில் உள்ளது. பாகுபாடு மற்றும் கருத்துவேற்றுமையைக் குறைத்து, விவேகம் மற்றும் ஒத்த கருத்துகளை அதிகரித்தால், சீனா, அமெரிக்கா மட்டுமல்லாமல் முழு உலகத்தக்கும் துணைபுரியும் விதமாக இருதரப்பும் சரியான தெரிவு செய்யும் என நம்பப்படுகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்