உடன்பாட்டை எட்டுவதற்கு உண்மையான முயற்சிகள் தேவை

வாணி 2019-10-27 15:23:28
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-அமெரிக்க பொருளாதாரம் மற்றும் வர்த்தகக் கலந்தாய்வுக்கான இரு தரப்புகளின் தலைவர்கள் 25ஆம் நாள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட கருத்து ஒற்றுமைகளை எட்டியுள்ளனர். பொது இலக்கை நோக்கி, இரு தரப்புகள் மேலும் முன்னேற்றம் அடைந்துள்ளதை இது கோடிட்டுக் காட்டுகின்றது.

சம நிலை, ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் எதிர் தரப்பின் அக்கறை கொண்ட பிரச்சினைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது சீனாவும் அமெரிக்காவும் உடன்பாட்டை எட்டுவதற்கான முக்கிய திறவுகோலாகும்.

வேளாண் பொருள் கோள்வனவு, ஃபென்டனைல் வேதிப்பொருள் உள்ளிட்ட துறைகளில் அமெரிக்கா கவனம் செலுத்தும் பிரச்சினைகளைத் தீர்க்க சீனா முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதனிடையில், அனைத்து கூடுதல் வரி வசூலிப்பையும் நீக்குதல், நடைமுறை நிலைமைக்கேற்ற வர்த்தகக் கொள்வனவுத் தரவுகள், ஆவணங்களின் சரிசமத் தன்மை முதலியவை சீனா கவனம் செலுத்தும் 3 முக்கிய பிரச்சினைகளாகும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்