ஹாங்காங் விவகாரத்தில் கெட்ட நோக்கத்தை மூடி நடிக்கும் அமெரிக்கா

வான்மதி&மதியழகன் 2019-11-28 20:04:15
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உள்ளூர் நேரப்படி நவம்பர் 27ஆம் நாள் அமெரிக்கா சீனாவின் கடுமையான எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், சொந்த விருப்பப்படி, ஹாங்காங் மனித உரிமை மற்றும் ஜனநாயக மசோதாவை சட்டமாக்கியது. அதன் இச்செயலை அமெரிக்கர்கள் கூட சகித்துக் கொள்ள முடியாது. அமெரிக்க அரசியல்வாதிகள் அமெரிக்காவைச் சீராக நிர்வகிக்காத நிலையில் ஹாங்காங் விவகாரத்தில் தலையிட முயன்று வரும் செயல், சொந்த திறனை உயர்த்து மதிப்பிடுவது போலாகும் என்று அந்நாட்டின் இணையப் பயனர்கள் வசை பாடினர். மேலும், அவர்களில் சிலர் சுட்டுரையில், “ஹாங்காங் அமெரிக்காவைச் சேர்ந்தது அல்ல, அது இறையாண்மை கொண்ட சீனாவைச் சேர்ந்தது. ஒரு நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடக் கூடாது”என்ற கருத்தைப் பதிவேற்றி, அமெரிக்க அரசுத் தலைவரிடம் தெரிவித்தனர்.

2019ஆம் ஆண்டு உலகப் போட்டித் திறன் அறிக்கையில், ஹாங்காங் தொடர்ச்சியாக உலகின் 2ஆவது இடத்தில் வகிக்கிறது. ஆனால், அமெரிக்கா மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஹாங்காங்கிற்கு பின்தங்கிய நிலையில் உள்ள அமெரிக்கா விரைவாக வளர்ந்து வரும் சீனாவை எதிர்கொள்ளும் போது, எப்படி செயல்படும்? ஜனநாயகம் மற்றும் மனித உரிமை ஆகியவற்றை சாக்குபோக்காகக் கொண்டு, அமெரிக்கா இந்த மசோதாவை நிறைவேற்றியது. இதன் மூலம், ஹாங்காங்கின் சிறப்பு சுங்க வரி என்ற தகுநிலையைக் குறைக்க அமெரிக்கா முயன்றுள்ளது. இது, மிகவும் கெட்ட செயல். ஹாங்காங்கில் வன்முறை மற்றும் கலவரத்தைத் தீவிரமாக்குவதன் மூலம், ஹாங்காங்கின் பொருளாதாரத்தையும் சர்வதேச நிதி மையத்தின் தகுநிலையையும் பலவீனமாக்குவதும், சீனாவின் நவீனமயமாக்க முன்னேற்றப் போக்கைத் தடைச் செய்வதும் தான் அமெரிக்கா இப்படிச் செயல்படுவதன் உண்மையான நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்